பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ... . நா. பார்த்தசாரதி வாகை, பாடாண், பொருள் மொழிக்காஞ்சி, குடுமி கொண்ட மண்ணுமங்கலம், நாண்மங்கலம் முதலியவை வீரவரலாறுபோல் அடுக்கப்படுகின்றன். குழவி மருங்கி னும் என்னும் நூற்பாவாலும் ஊரொடு தோற்றம்' (உலா) என்னும் நூற்பாவாலும் இலக்கியத் தோற்றங் கட்கு அடிகோலப்படுகிறது. கொடிநிலை, கந்தழி, வள்ளி, கடவுள் வாழ்த்து, கொற்றவள்ளை, முதலிய துறைகளில் வழிபாடு, ஆடல், பாடல் ஆகியவை கூறப்பட்டு விடு வதைக் காண்கிருேம். திணை, துறை, தலைவன், முதலிய பாத்திரங்களால் அகத்திணையியல் காதல் இலக்கியமாக வும், புறத்திணையியல் வீர இலக்கியமாகவும் அமையும்படி நூலியற்றியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியர். மேற் கூறிய உதாரண நூற்பாக்களும் பிரிவுகளுமே இக்கூற்றை விளக்குவன. களவு கற்பு பொருளியல்கள்: காதல் இலக்கியத்தின் பாத்திரங்களான தலைவன், தலைவி, நற்ருய், பாங்கன், பாங்கி பாணன் முதலியோர் களவினும், கற்பினும் பேசும் இடங்கள், பழகும் முறைகள் ஆகியவை களவியல், கற் பியல்களில் விவரிக்கப்படுகின்றன. பொருளியல்-என் பது மேற்கூறிய மற்ற இயல்களிற் கூறப்பட்டவற்றிற்குப் புறனடை, வழுவமைதிகள் இணைக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அந்தப் புறனடைகளும், வழுவமைதிகளும்கூட இலக்கிய நயம்பட அமைக்கப்பட்டிருக்கின்றன. இசை திரிந்திசைத்தல், ஒரு சிறை நெஞ்சமொடுசாவுதல், உண் டற்குரிய வல்லாப் பொருளை உண்டன போலக் கூறல், அறக்கழிவுடையன பொருட்பயம்பட வருதல், அம்பல், அலர், ஆகிய இலக்கியத்துக்குப் பயன்படும் நுணுக்கமான மன இயற்செய்திகள் பல பொருளியலில்தான் அறிவிக்கப் படுகின்றன. அம்பல், அலர், ஆகியவை தொல்காப்பிய ரின் உளவியல் நுண்புலமைக்கும், மனத்தத்துவ அறிவிற். கும். எடுத்துக்காட்டுக்களாக அமைவன. ாமன்பின்னக நின்ற திணைகள் இயல்களுக்கு இலக்கியச் சார்பும் பொருத்