பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிரம் - 95 பார்வை 'காப்படங் கென் றன்னை கடிமனை யிற்செறித் தியாப்படங்க வோடி யடைத்தபின்-மாக்கடுங்கோ னன்னலங் காணக் கதவத் துளைதொட்டார்க் கென்னே கொல் கைம்மா றினி.' . . என்னும் இப்பாடல் முத்தொள்ளாயிரத்தில் கைக்கிளேப் பகுதியில் வருகிறது. தெருவில் உலா வரும் மாக்கடுங் கோனின் அழகைக் காணவிடாமல் காப்பிட்டு அடக்கி இற் செறித்து அன்னை எல்லாவிதமான கட்டுப்பாடுகளை யும் விதித்த பின்னும் தலைவி அவனழகைக் காண்பதற் கென்றே அமைந்தாற் போலக் கதவில் துளை அமைந்திருந் தது. அவ்வாறு இக்கதவில் துளை அமைத்திருப்பவர் களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யவல்லேன்?'-என்று நன்றி உணர்வோடு நினைக்கிருள் தலைவி. தற்செயலாகக் கதவில் அமைக்கப்பட்டிருந்த துளையைத் தான் அவனழ. கைக் காண்பதற்காகவே அமைக்கப்பட்டதுபோல் கருதிக் கொண்டு தலைவி கூறும் நயம் இப்பாடலின் சிறப்பாகும். காப்படங்கு என்று இற்செறித்த அன்னையின் நோக்கம். பயன்படாமல் போகுமாறு கதவில் துளை தொட்டவர் களுக்கு எவ்வாறு கைம்மாறு செய்ய முடியும் என்று தலைவி ஏங்குவது போல் அவள் கூற்ருகவே பாடல் அமைந்துள் ளது. கைக்கிளேப் பகுதியிலுள்ள மிக நயமான அழகிய பாடல்களில் இதுவும் ஒன்ருகும். பாண்டியனேக் குறித்துப் பாடப்பெற்ற பாடலாக இதனை அறிஞர் பகுத்துக் கூறு: 6.jF . -