பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கா. பார்த்தசாரதி படை வீடுகள் ஆறும் அவருடைய பன்னிரு திருக்கரங் களின் செயல்களும் கூறப்பட்டுள்ளன. முருகனடியார் களே அவன் படைவீடுகளுக்கு ஆற்றுப்படுத்துவதுபோல் நூல் அமைந்துள்ளது. 2. பொருங்ராற்றுப்படை இதுவும் ஆற்றுப்படை இலக்கியமே. பொருநராவார் கூத்து முதலிய கலையில் ஈடுபடுவோர். பரிசு பெற்று வரும் பொருநன் ஒருவன் தன் வழியில் எதிர்ப்படுகின்ற பரிசில் பெறும் கருத்துடன் சென்று கொண்டிருக்கும் மற்ருெரு பொருநனைச் சோழன் கரிகால்வளவனிடத்திற் சென்று பரி சில் பெறும் முறைமையினை எடுத்துச் சொல்லுவதாக முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவரால் பாடப்பட் டது இந்நூல். பொருநரை ஆற்றுப்படுத்தலின் பொருந ராற்றுப்படை எனப் பெயர் பெற்றது. - - 3. சிறுபாற்ைறுப்படை 4. பெரும்பாணுற்றுப்படை இவையும் ஆற்றுப்படை இலக்கியவகையையேசேரும். பொருநரை ஆற்றுப்படுத்தலைப் போல் பாணர் குழுவை ஆற்றுப்படுத்துவது இது. ஒய்மானுட்டு நல்லியக்கோடன் என்னும் குறுநில மன்னனைச் சிறப்பித்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனர் என்னும் புலவர் பாடிய ஆற் றுப்படை நூலே சிறுபானற்றுப்படை ஆகும். அதே போல் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர், உருத்திரங்கண்ணனர் பாடியது பெரும்பாணுற்றுப்பட்ை. 5. முல்லைப்பாட்டு - - போரின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைமகன் மீண்டு வரும் வரையும் தலைவி ஆற்றி இருந்தமை கூறிப் பாடப்பட்டது முல்லைப்பாட்டு. 'இருத்தல் முல்லேக் குளிப் பொருளாதலின் இது இப்பெயர் பெற்றது. பத்துப் பாட்டு நூல்களுள் மிகக் குறுகிய அடிகள் கொண்டது இந் நூல்தான். இதனைப் பாடியவர் நப்பூதனர் ஆவார். ஆசி