பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டு-ஒரு பார்வை 61 ரியர் இந்நூலில் மிக எழிலுற முகிலுக்குத் திருமாலை உவ மையாகக் கூறியுள்ளார். 6. மதுரைக்காஞ்சி இது தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உலகின் நிலையாமையை அறிவுறுத் தற்பொருட்டு (பொருண் மொழிக் காஞ்சி) மாங்குடி மரு தனர் பாடியது. அப்பாண்டியனுக்கு உலகநிலையாமையை அறிவுறுத்தி வீடுபேற்றை நாடுவிக்கும் கருத்துடன் பாடி Աugi/, இது பத்துப்பாட்டுள் உள்ள எல்லாவற்றுள் ரும் அளவால் மிகப் பெரியது ஆகும். 752 அடிகளைக் கொண்டது, இதில் பாண்டியர்களுடைய முன்னேர் .களின் பெருமையும், பாண்டியனின் வீரமும், கொடையும், அஞ்சாமையும் நடுநிலை பிறழாமையும் சிறந்த முறையில் எடுத்துச் சொல்லப்படுகின்றன. பாண்டியனின் சிறப்புக்களும் பழங்கால மதுரை நகரப் பெருமையும் இந்நூலில் கூறப்படும் சிறப்பே சிறப்பு. பாண்டியன் பாணர் க்குக் களிறு, பொற்ருமரை முதலியன கொடுத்ததும், சேர, சோழ மன்னர்களை வென் றதும், கொற்கைத் துறைக்குத் தலைமை பூண்டிருந்ததும் கூறப்படுகின்றன. விண்ணவர் உலகத்தை அமிழ்தத் தோடு பெறுவதாயிருந்தாலும் பாண்டியன் பொய்புக லாத நன்னெறிக்கண் நிற்பவன் என்றும் இவ்வுலகும் விண் ணுலகமும் திரண்டு வந்தாலும் பகைவர்க்கு அஞ்சாத ஆண்மையுடையவனென்றும் கூறி உலகப் பொருள்களின் நிலையாமையை உணர்த்தி நிலைபெற்ற பரம்பொருளை நாட வேண்டும் என்று கூறுகின்ருர். மதுரை நகரில் அந்தணர், வேளாளர், வணிகர் முதலியோரது இருக்கைகளும். தொழிலாளர் இருக்கைகளும். கடைத்தெரு முதலிய தெருக்களின் சிறப்பும், முதலியனவும் இந்நூலில் மிகநன்கு வருணிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர்களின் முன் னேர்கள் செய்த புகழ்பெற்ற யாகங்கள், புலவர்களைப்