பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர்காலக் கலைகள் எந்த மன்னர் மரபின் வரலாற்றை ஆராய்ந்தாலும் அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு சில கலைகள் வளர்ந்திருக் கும். ஒரு சில புலவர்கள் பாடியிருப்பார்கள். ஒரு சில போர்கள் நடைபெற்றிருக்கும். ஒரு சில வெற்றிகளும் கிட்டியிருக்கும். வரலாற்றில் இவை இயல்பாக நிகழ்பவை தாம். - ஆனல் பல்லவர் காலத்து வளர்ச்சிகளே இவ்வாறு இயல்பானவை ஆகவும் சொல்லி முடித்துவிட முடியாது. அந்த வளர்ச்சி சிறப்பானதும் தனிப் பெருமை உடைய தும் ஆகும். கலைவளர்ச்சியோ இணையற்ற வகைகளில் எண்ணற்ற பிரிவுகளில் செழிப்புற நிகழ்ந்திருக்கிறது. தமி ழக வரலாற்றில் கலைகளின் பொற்காலம் என்று எதையா வது சொல்ல முடியும் எனின் அது பல்லவர்களின் கால மாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில கலைகள் தளர்ந்தன என்றில்லாமல் பல்வேறு கலைகளும் ஒரு சீராக வளர்ந்திருக்கும் நிலைமையைப் பல்லவர் காலத்தில் காண் கிருேம். இணையற்ற கவிஞர்கள், ஒவியர்கள், சிற்பிகள், இலக்கண நூலாசிரியர்கள் எல்லாம் பல்லவர் காலத்தில் உயிர் வாழ்ந்திருக்கிருர்கள் என்பதே இதற்குச் சான்று. முன்னும் பின்னும் எக்காலத்திலும் இல்லாத அளவு கலை ஞர்களும் கலைகளும் பல்லவர் காலத்தில் வளர்ந்திருக்கிருர் . கள். இந்த இணையற்ற பொற்காலத்தின் கலை வளர்ச்சி யைப் பற்றி இனிமேல் விவரங்களைக் காண முற்படலாம்.