பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 77 பார்த்து-பார்ந்து என வடிவமில்லை. ஈத்து ஈந்து போல இருவினை வடிவுகளுமுள்ளன. * - ஏவுவோன் இயற்றுவோன் வினை: தொல்காப்பியர் காலத்திலேயே ஏவுவோன் இயற்றுவோன்வினை-அவை அல்லாவினை-என்னும் பகுப்பு இருந்தது. குகைக் கல் வெட் டு மொழியிலும் இது தெரியும், ஏவுவோன் இயற்று வோன்வினை அல்லாதன வேருடன் எவ்வித விகுதியுமின்றி வரும். ஏவுவோன் இயற்றுவோன் வினையானது வேரு டன் 'ப்' விகுதியும் இ'கரத்துணையும் பெற்று வருகின் றது. ஏவுவோன் இயற்றுவோன் வினை தொல்காப்பியத் திலேயே உள்ளது. சான்று: 'அம்ம கேட்பிக்கும்' (தொல் 161) சான்று: போர்-போர்ப்பித்த (புறம் 286-5) பிறவினை அடிகளின் இறந்தகால வடிவங்கள் பலவற்றில் பல்லின வெடிப்பொலிகள் இரட்டித்து வருகின்றன. இந்த இரட்டைத் தகர மெய்களில் இரண்டாம் த கரமெய் .பிறவினை விகுதியாகவும் கொள்ளப்படுகிறது. மூக்கொலி எதுவும் அவ்விடம் இருந்தால் அது மறையும். இவ்வாறு பொதுமைப்படுத்தலால் பிறவினையின் இறந்தகாலவடிவம் இல்லாத பொழுதும் முதலில் வரும் தகர மெய் பிறவினே விகுதியாக நிற்கிறது. சான்று நட > நடத்து செல் > செலுத்து பகர அல்லது இகர மெய்க்குப் பின்னர் வரும் இகரம் ஏவு வோன் இயற்றுவோன் விகுதியாக உணரப்பட்டுள்ளது. இரீஇ' (புறம்-18-5) ஆனல் எல்லாச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களிலும் இகரம் ஏவு வோன் இயற்றுவோன் வினையைக் குறிப்பதில்லை. சான்று