பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கா. பார்த்தசாரதி இடங்களில் உகரம் மறையலாம் எனத் தொல்காப்பியரே கூறுகிருர், ஆளுல் இவ்விதியைப் பெயரெச்சங்களுக்கு மட்டுமே உரியதாக வரையறுத்துக் கொள்கிரு.ர். 'அவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை உகரம் அவ்விடன் அறிதல் என்மனர் புலவர்” (தொல் 723) மொழியிறுதியில் மெல்லின மெய்கள் மயங்கி வருவதைப் போன்ம்' என்ற ஒரு சொல்லுடன் மட்டுமே அவர் நிறுத் திக் கொள்ளும் பொழுது மொழியிடை உகரம் சில இடங் களில் மறையலாம்' என்ற விதி (போன்ம் என்னும் சொல் தவிர) மெல்லின மெய் மயக்கங்கள் மொழியிறுதியில் தோன்ற வழிவகுக்குமாயின் தொழிற்படுவதில்லை என்றே பொருள். ஆனல் விதிவிலக்கே பின்னர் விதியானது. ஆயினும் அவ்விதி கட்டாயமான விதியன்று, ஆய்தம் பின் ஞளில்தான் தனியாக ஏற்கப்பட்டது. அஃது > அகுதை என வருமாறு காண்க. பத்தொன்பதாம் நூற்ருண்டு வரையிலும் (அகுதை-புறம்-347-5) கூட ஆய்தத்தின் மூன்று புள்ளிகளும் இணைக்கப்பட்டு கூ’ என்னும் வடிவ வகையில் எழுதப்பட்டது. எனவே இம்மாறுதல் சங்க காலத்தினதா என்பது பற்றி ஒன்றும் கூற முடியாது. உருபனியல்: குகைக் கல்வெட்டுக்களின் தமிழையே தொல்காப்பியத் தமிழாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. சங்ககாலத் தமிழும் அவ்வாறே நினைவூட்டுகிறது. செய்து என்னும் வினையெச்சமாகிவிட்ட பழைய பயனிலை வடிவங் களுடன் பெயர்ப்பதிலிவிகுதிகள் சேர்க்கப்படுகின்றன. காலங்களுக்கிடையே வேறுபாடு தன்வினை-பிறவினை வேறுபாடு என்பன எல்லாம் பின்னர் ஏற்பட்ட சிறப்பு வளர்ச்சிகளின் விளைவுகளாகும் 'து' வில் முடிவன. த்து’ வில் முடிவன. ந்துவில் முடிவன. வருந்து வருத்து. ஆனல் நேர்ந்து மாதிரி ஒரே வடிவமுள்ளதும் உண்டு.