பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கா. பார்த்தசாரதி யைக் கைகழுவியதால் வந்த வினையைத்தான் இன்று அது பவிக்கிருேம். இன்றைக்குப் படித்தவன் திமிராயிருக் கிருன். பிறரை மதிப்பதில்லை. ஒன்று மகா முரடனை படித்தவனைப் பார்க்கிருேம் அல்லது மிகவும் கோழையான படித்தவனைப் பார்க்கிருேம். அல்லது எதிலுமே நம்பிக்கை யும் கடின உழைப்பும் இல்லாத படித்தவனைப் பார்க் கிருேம். நியாயமற்ற முறைகளிலைாவது வெற்றியை அடையத் தவிப்பதையும் நியாயமான தோல்விகளைக் கூடத் தாங்கிக் கொள்ளப் பொறுமை இல்லாததையும் காண்கிருேம். பக்தி சிரத்தையை விட இன்றைய கல்வி யில் பண வரவு செலவு முக்கியமாகிவிட்டது. சமய நம் பிக்கை கல்வியிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டது. கற்பதற்குத் தகுதி என்று எதுவுமே இல்லாமல் போய்விட்டது. களி மடி மானி காமி கள்வன் பிணியன் ஏழை பிணக்கன், சினத்தன் தொன்னூற் கஞ்சித் தடுமாறுள்த்தன் தறுகணன் பாவி படிறன் இன்ஞேர்க்குப் பகரார் நூலே' - - - (நன்னூற்பாயிரம்) என்பதாகக் கற்கத்தகாதோர் இன்னின்னர் என ஒரு பட்டியலே ஒழுக்க அடிப்படையில் முன்பு இருந்தது. அந்த அடிப்படை இன்று தவிர்க்கப்பட்டு விட்டது. படிப்பின் பயனை விநயம், குழைவு, அக்கறை, கருணை, எதுவும் இப் போது வருவதில்லை. டிகிரி மட்டுமே கைக்கு வருகிறது. டிகிரியோடு கூட இன்றைய கல்விமுறையின் உடன் பிறப் புக்களான தடித்தனமும், அகம்பாவமும், கொண்டது விடாமையும், கூடவே வருகின்றன. படிப்பின் பயனை பண்பாடு (Culture) வருவதில்லை. பக்குவம் வருவதில்லை. கனிவும் வருவதில்லை. இன்று கல்வியிலிருந்து ஆன்மீக நோக்கத்தையும் சம அத்தையும் (மனப்பக்குவம்) நிர்ப்பந்தமாய்ப் பிரித்ததன்