பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கமும் கல்வியும் 7 விளைவு இது. இதல்ை இன்றைய கல்வி ஒரு விவேகா நந்தரையோ. பாரதியாரையோ, காந்தியையோ, நேரு வையோ தருவதில்லை. கல்விக் கூடங்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்ரும வகுப்புப் பட்டதாரிகளையே தருகின்றன. கல்விக் கூடங்கள் வெறும் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல் ஆகிவிட்டன. பட்டதாரிகள் பெருகுகிருர்கள். படிப்பாளிகளும், பண் பாளர்களும் விரல்விட்டு எண்ணுவதற்குக் கூடக் கிடைக்க மாட்டேனென்கிருர்கள். இந்தியாவின் இன்றைய கலா சார வறுமைக்கு (Cultural Powerty) இப்போதுள்ள சார மற்ற கல்வி முறையே காரணமாகும். பழைய குருசிஷ்ய ப்ரம்பரைக் கல்வியிலிருந்த அழுத்தமான இந்தியத்தன்மை (Indianness) போய் விட்டிருப்பதைக் கவனிக்கிருேம். இன்றைய நமது கல்வி முறையில் மேற்கு நாடுகளின் விஞ் ஞானக் கலாசாரமும் இல்லை. கீழ்த் திசையின் ஆன்மீக அடிப்படையும் இல்லை. * - -- " - - - - 'கற்ற தல்ை ஆய பயன் என் கொல்?' என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. அறிவின் ஒரே பயன் பிற ருடைய துன்பங்களைத் தன் துன்பம் போல் பாவிக்கின்ற பரந்த கருணை உணர்வுதான் என்கிருர், திருவள்ளுவர். 'அறிவினன் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்ருக் கடை' - என்பது திருவள்ளுவருடைய வின. பிறருக்குத் துன்பங். களேச் செய்யத் தூண்டுகிற அல்லது கற்றுக் கொடுக்கிற அறிவுதான் இன்று நடைமுறையில் இருக்கிறதே ஒழியப் பிறர் துன்பங்களுக்கு நெகிழும் அல்லது உருகும் அறிவு: இன்று காணக் கிடைப்பதில்லை. - இது முதல் இழப்பு. அடுத்து இன்னும் பல இழப்புக் கள், கலாசாரம் என்ற பாரம்பரியம் நிறைந்த இந்தியத் தன்மை நம்முடைய இன்றைய கல்வியிலிருந்து நழுவியே. போய்விட்டது. இவை எல்லாவற்றையும் விடப் பெரிய