பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறலி விடு துது 93 ஆழில் உண்டு. கழுதைவிடு துாது என்று கூட ஒரு நூல் விறலியைத் தூதாக அனுப்பும வகையைச் சேர்ந்த விறலிவிடு துது என்ற பிரிவில் ஏராளமான பிரபந்தங்கள் தமிழ் மொழியில் உள்ளன. அச்சானவை பல. அச்சாகா மல் இன்னும் ஏடுகளிலேயே உள்ளனவும் பல. அழகர் கிள்ளைவிடு தூது. தமிழ்விடு தூது போன்ற நூல்களுக்கு உள்ள இலக்கியப் பெருமையும், கெளரவமும் விறலிவிடு தூது போன்ற பிரபந்தங்களுக்கு இல்லை என்ருலும் கவர்ச்சி இருக்கிறது. இக்கவர்ச்சிக்குக் காரணம் இப்படி நூல்களிலுள்ள மிகுதியான சிற்றின்ப வருணனைப் பகுதி களே என்று கூற வேண்டும். முடிவாக நூலின் பிற்பகுதி யில் வரும் மனம் திருந்திய தலைவன் 'தன் பழைய தவறு களை மனத்திற் கொள்ளாது தன்னை ஏற்க வேண்டுமென்று விறலி ஒரு த்தியைத் தன்னுடைய மனைவிக்குத் துTதனுப் புவதாய் வரும். முத்தாய்ப்புத் தவிர ஏனைய பகுதிகளில் கணிகையர் உலகில் கட்டவிழ்ந்துபோய்ச்சீரழிவதுபோன்ற வருணனைகளே அதிகம். கெடுவதை முழுமையாகச் சொல்லிவிட்டுப் பின்பு துாதினிறுதியில் மனந்திருந்தி ஒழுக்க வாழ்க்கைக்கும் உயர் குணங்களுக்கும் தலைவன் திரும்புவதுபோல் முடிப்பது இப்படி நூல்களில் மரபாக இருக்கிறது. திருந்தித் திரும்பும் பகுதி ஒன்றே நீதிக்குரிய அம்சமாகிறது. - விறலி என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிஞ்று வயது நிரம்பிய குமரிப்பெண் என்று பொருள். அதோடு எண் வகைச் சுவையும் மனத்தின் கண்பட்டகுறிப்புக்களும் புலப் படப்புறத்துப் போந்து ஆடும் திறமைக்கு விறல் என்று பெயர் இருப்பதால் அத்திறமையை உடைய இவ்விளம் பெண் விறலி எனப்பட்டாள். பாணனுக்குப் பெண்பாலா கிய பர்ணிச்சி, பாடினி என்றும் விறலியை அழைக்கலாம் என்றும் தெரிகிறது. எனவே இப்பொருள்களைக்கொண்டு 'விறலிவிடு தூது' என்ற பெயருக்குப் பொருள் பார்க்