பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நா. பார்த்தசாரதி குங்கால் ஆடல் பாடலில் திறனுள்ள அழகிய பதினறு வயது இளம் பெண்ணைத் துாதாக அனுப்புவது என்ற பொதுவான பொருள் கிடைக்கிறது. அதாவது விறலி) யைத் துதாக விடுவது என்ற அர்த்தமும் விரியும். தோழி தாயே என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரக் கற்பியல் நூற்பாவில், பாணன்பாடினி இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர் அறிவர் கண் டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப' என்று வருகி றது. வாயில்' என்பது தூதிற்குத் தொல்காப்பியர் பயன்படுத்திய சொல்லாகும். வாயில் என்ருல் தூது, என்று பொருள்படும். பயில் தரும் கலிவெண்பாவினுலே உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும். சந்தியின் விடுத்தல் முந்துறு தூது எனப் பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே' என்று இலக்கண விளக்கம் துரது நூலே வரையறுக் கிறது. இலக்கணமும் கூறுகிறது. தறிகெட்டுத் தாறுமாருக அலைந்து கணிகையர் மயக் கில் சீரழிந்த ஒருவன் பின்பு மனம் திருந்தி விறலியை அழைத்து-அந்த விறலியின் இளமை அழகு ஆடல் பாடல் திறன் முதலியவற்றை எல்லாம் பல வார்த்தைகள் வர் னித்தபின் அவளை விளித்துத் தான் மனைவியை விட்டுப் பிரிந்து மாயக்கணிகை ஒருத்தி வசம் சிக்கி அதுவரை ஒழுக் கமும் பொருளும் இழந்த விவரங்களே எல்லாம் விவரித்துக் கூறி இப்போது திருந்திவிட்டதாகவும், மனைவியிடம் போய்த் தனக்காகத் துரது சொல்ல வேண்டும் என்றும் விறலியை அனுப்புவதே இந்தத் தூது வகை இவக்கியத் தின் சாராம்சம் என்று தொகுத்துக் கூறிவிடலாம். பழைய மதுரை வளநாட்டு உட்பிரிவுப் பகுதியா யிருந்த நிலக்கோட்டை நாகம கூளப்ப நாயக்கன்மீது சுப்ர