பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

குறிக்கப்பட்டுள்ள அறக்கட்டளையினை ஏற்று நடத்தும் பொறுப் புடையவராகவோ இக்கட்டளைக்குரிய நிர்வாகத்திற்கு உரியவராகவோ தீட்சிதர்கள் இச்செப்பேட்டிற் குறிக்கப்படவில்லை. இவ்வறக்கட்டளையினை ஏற்று நடத்தும் நிர்வாகப் பொறுப்புடையவராகத் தாண்டவன் தோட்டம் சபாபதிகட்டளையினை நடத்தும் சரவணைத்தம்பிரான் என்பவரே குறிப்பிடப்பெற்றுள்ளார்.

இச்செப்பேட்டிற் கூறப்பட்ட - செய்தியினைக் கூர்ந்து நோக்குங்கால் அக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலுக்கு மன்னர்களாலும் குடிமக்களாலும் நிறுவப்படும் கட்டளைகளை நிர்வகிக்கும் பொறுப்பு அகோரபண்டாரம் போன்ற திருமடத்தின் தலைவர்களிடத்திலும் சரவணைத் தம்பிரான் தலைவர்களிடத்திலும் சரவனைத் தம்பிரான் போன்ற துறவிகளிடத்திலும் ஒப்படைக்கப்பட்ட தென்பதும் தில்லை வரழந்தணர்கள் திருக்கோயிலின் பூசனை முறைகளாகிய உள் துறை அலுவல்களை மட்டுமே கவனித்துக்கொள்ளும் உரிமையாளராக இருந்தனர் என்பதும் நன்கு புலனாதல் காணலாம்.

தில்லைப்பெருங்கோயிலுக்கென - வேந்தர்களும் குறுநில மன்னார்களும், வள்ளல்களும், தேவதானமாகக் கொடுத்துள்ள ஊர்களும் நிலங்களும் பிற்காலத்தவர்களாற் சுவரப்பட்டன. எனவே. தில்லைப் பெருங்கோயிலுக்கென இப்பொழுது நில வுடைமை எதுவுமில்லை. காஞ்சிபுரம் பச்சையப்பமுதலியார் போன்றதமிழ் முன்னோர்கள் நிறுவியுள்ள அறக்கட்டளை சுளைக் கொண்டே இக்கோயிலின் நாள்வழிபாடும் திருவிழாக்களும் சிறப்புற நிகழ்ந்து வருகின்றன.

தில்லைவாழந்தணர்கள் கூத்தப்பெருமானுக்குப் பூசனை புரியும் அவ்வளவில் மட்டும் அமைந்துவிடாமல் இக்கோயிலுள்ளே நிகழும் அகத்தொண்டுகள் எவ்லாவற்றையும் தாமே செய்யும் பொறுப்பினை - மேற்கொண்டவர்கள் என்பது 'அந்தணர் கோயி லுள்ளால் அகம்படித் தொண்டு செய்வார்.' எனவரும் சேக்கிழார் வாய் மொழியாலும், குடந்தையை