பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

வீழ்ந்து உயிர் விடுவாராயினர். இவ்வாறு இருபது பேர் வரை தற்கொலை செய்து கொண்ட துன்பக்காட்சியைத் தன் கண்களாற் கண்டும் மனமிரங்காத கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறித் தற்கொலை செய்ய முந்துபவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டான். அதன்படி தில்லை வாழந்தணர் இருவர் சுடப்பட்டு இறந்தனர். இத்துன்ப திலையைப் பொறுக்கலாற்றாது தில்லைவாழந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார் ஒருவர் தமது கழுத்தையறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அரசாங்க அதிகாரியொருவனது சமயப் பிடி வாதங்காரணமாகச் சிதம்பரம் கோயிலுக்குள்ளே இத்துன்பச் செயல்கள் நிகழ்ந்த நாளில் மேலை நாட்டிலிருந்து யாத்திரை காரணமாகத் தமிழ் நாட்டிற்குச் சுற்றுப்பயணஞ் செய்த பிமெண்டா (Jesevit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன். இக் கொடுஞ்செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சியை யுணரும் நல்லறிவுடையோர் எவரும் கண்ணீர் விட்டு வருந்துவர் என்பது திண்ணம்.

The Aravidu Dynasty by Father Heras (P. 553)

1. 'A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A. D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava, was there Superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father: N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to 'Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some cefused, others by their legates importunatly urged and the Naiks of Gingee degreed to erect in the temple'. These last words of pimenta indicate that