பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதப்பெற்ற கட்டுரைகள் படிப்போர் சிந்தனையைத் தூண்டி உண்மை காணும் ஊக்கத்தை வழங்கும் செறிவும் தெளிவும் அமைந்த சிறப்புடையனவாகும்.

டாக்டர் நாவலர் பாரதியார் அவர்கள்,மேற்கொண்டு நிகழ்த்திய ஆராய்ச்சிகளுள் தொல்காப்பியப் பொருளதிகாரம் பற்றிய ஆராய்ச்சி இதுவரை யாவராலும் மேற்கொள்ளப்படாத அருமையும் ஆழமும் உடையதாகும். இலக்கணக் கடலனார் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் அவர்கள் தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பற்றியே நுனித்து ஆராய்ந்தார்கள். இராங்சாகிபு மு.இராகவையங்கார் இயற்றிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் ஆய்வு நூல் நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் இயற்றிய உரைகளின் சுருக்கமேயன்றித் தனி ஆய்வு நூலன்று. அந்நூலில் தமிழர் நாகரிகத்தொடு பொருந்தாத கொள்கைகளும், ஆரிய மலோரே தமிழர் வாழ்வியலிற் கற்பொழுக்கத்தைக் கற்பித்தார்கள் என்னும் பிழைபட்ட கூற்றுக்களும் இடம் பெற்றுள்ளமை காணலாம்,

இத்தகைய பொருந்தாக் கொள்கைகள் தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளமை கண்டு வருந்திய நாவலர் பாரதியாரவர்கள் பண்டைத் தமிழ் இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியத்திற்குப் பிற்காலத்திற் குடிபுகுந்த அயலவர் கொள்கைகளையேற்றிப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால ஆசிரியர்களின் உரையிலுள்ள குற்றங்களை யெடுத்துக்காட்டியும், தமிழ் மக்களது வாழ்வியலையே பொருளாகக் கொண்டு இயற்றப்பெற்ற தொல்காப்பியத்தின் தனித்தன்மையைப் புலப்படுத்தியும் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு மெய்யுரை காணும் முயற்சியினை மேற்கொண்டார்கள்.

"பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், ஆரியப் பாணினிக்கும், துரிய மேற்புலயவன அரித்தாட்டிலுக்கும் முந்திய தொன்மையுடையது. பாணினியின் செறிவும் பதஞ்சலியின் திட்பமும் அரித்தாட்டிலின் தெளிவும் அவையனைத்தினும் இல்லா வளமும் வனப்பும் அளவை நூன் முறையமைப்பும் பெற்றுச்

4

4