பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శొ 3 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் உதாரணம் 'கடாஅ உருவொடு...... வல்லதே ஒற்று.” (குறள். ருஅரு) இது அளபெடை யலகுபெற்றது. "இடைநுடங்க வீர்ங்கோதை பின்தாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்த கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு." இதன்கண் அளபெடை யசைநிலையாகி யலகுபெறாதாயிற்று. (கசு) பேராசிரியம் : இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி; மேல் எழுத்ததிகாரத்து ஒதப்பட்ட அளபெடையை ஆண்டு மொழியெனக் கூறினான், அவ்வாற்றானே அவை பெரும்பான்மையும் ஈண்டும் ஈரசைச்சீராகலின் ஈண்டுச் சீர்கூறியவாற்றான் எய்திநின்றன. வற்றை எழுத்து நிலைமைப்படுத்து அசைநிலையும் வேண்டினமையின். (இ - ள்.) அளபெடை மேற்கூறிய இயற்சீர் நிலைமையே யன்றி ஒரசையாய் நிற்றலும் உரித்து (எ று). உம்மையாற் சீர்நிலையெய்தலே வலியுடைத்து.2 'நிலை’ யென்றதனான் எழுத்து நிலைமையும் நேர்ந்தானாம்; என்னை? அசையது நிலையைக் குறிலும் நெடிலுங் குறிலினையுமென எழுத்தான் வகுத்தமையின்: அவை மேற்கூறிய ஈரசைச்சீர் பதினாறனுள்ளும் என்ன சீர்ப்பாற்பட்டன வெனின் ஆசிரியவுரிச்சீ ராறும் போதுபூ விறகு தீ என்னும் இரண்டியற்சீரும் ஒழித்து ஒழிந்தவியற்சீர் எட்டுமாம். அங்ங்னமாதல் ஒருமொழியகத்தே உடையவென்பது. ஆஅ எனத் தேமாவாயிற்று. கடாஅ’ (குறள் 585) எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறாம்; என்னை? கடாஅ என்புழி அளபெடையதாகாரம் 1. உயிரளபெடை நெடிலும் குறிலும் ஆகிய ஈரெழுத்தாய்ச்சிராந்தன்மையின் நீங்கி ஓரெழுத்தாய் அசையாம் நிலைமையினைப் பெறுதலும் உண்டு என்பதாம். 2. அசைநிலையாதலும் என்புழி உம்மையை எதிர்மறையும்மையாகக்கொண்டு அசைநிலையாதலின்றிச் சீர்நிலையெய்துதலே வலியுடைத்து என்றார். 3. நிலையென்றதனால், உயிரளபெடை நெடிலும் குறிலும் என எழுத்தாம் நிலையினை ஒரு மொழிய கத்தே பெற்று வருதலும் ஆசிரியர் உடன்பட்டாராயிற்து.