பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ $ $r» தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கேயுரியவாதல்போல, இயற்கையளபெடை அசைநிலையாதல் செய்யுட்கேயுரியவாதலும், புணர்ச்சிவகையான் எழுத்துப் பேறாகிய அளபெடைகள் அசைநிலையாதலும், பொருள் புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கையளபெடையுட் சிலவும் அசைநிலையாதலுங்கொள்க.1 உ-ம். 'உப்போஒ வெனவுரைத்து மீள்வாள்' என்புழிப் பண்டமாற்றின்கட் பகரவோகாரத்திற்குள்ள ஒரலகே பெறுதலின் ஒரசையாயிற்று. "நூறோஒ நூறு” என்பதும் அது. இவை இயற்கையளபெடை யசைநிலையாயின. “பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன்' என்புழிப் பலாஅ எனப் புளிமாவாகாது ஒரசையாய்க் கோடு என்பதுங் கூட்டிக் கணவிரியாக அலகு பெறும். 'குறியதன் முன்னரும்” (எழுத்-உயிர்மயங்-உச) என்னுஞ் சூத்திரத்தாற் பெற்ற அகரமும் அளபெடைபோல் அசைநிலையாயிற்று.2 'நிலம் பாஅய்ப்பாஅய்ப் பட்டன்று நீணிலா மென்றோள் கலம் போஒய்ப்போஒய்க் கெளவை செய’ எனப் போஒய்ப்போஒய் எனச் செய்கைக் குறிப்புப் புலப்படச் செய்யுள் செய்தவழியும் அசைநிலையாயிற்று இவை ஒசை சிதைத்தாற் செய்யுளின்பஞ் சிதையுமென்று அலகிருக்கைக்கட் சிதைத்தார். இவை அலகுபெறாவெனவே, நெடிலின்றன்மையே. யாயிற்று. இதனானே குற்றிகரம்போல் எழுத்தாந்தன்மையும் பெற்றாம். இனி, வாஅழ்க எனவும், தூஉமணி எனவும் மூவசைச் 1. புணர்ச்சி வகையால் எழுத்துப் பேறாகிய அளபெடை என்பது, பலா - கோடு - பலாஅக்கோடு என்றாற் போன்று புணர்ச்சியில் அளபெடை யெழுத்துப் பெற்று வருவது. 2 பொருள் புலப்பாட்டிற்கெனப் புலவர்கள் செய்து கொண்ட அளபெடை என்பது பாஅய்ப்பாஅய்', 'போஒய்ப்போஒய்' என்றாற்போன்று செய்கைத்திறம் புலப்படப் பொருள் புலப்பாடு குறித்து வருவது. 3. இவை ஒசை குறைத்தாற் செய்யுளின்பம் சிதையுமென்று அளபெடை யோசையைக் குறைக்காமல், அலகிடுங்கால் எழுத்தெண்ணப்பெறா என

க்த க

லகட்டும் குறைத்தார்.