பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கஅ எம்.எ (இ - ள்.) அவண் இயற்சீ ரிறுதிமுன் நேர்நிற்பின் எ-து அவ்விடத்திற் கூறிய இயலசையானாகிய இயற்சீ ரிறுதிக்கண் நேரசை வந்து நிற்பின்: வெண்பாவுரிச்சீராகுமென்ப எது அந்நான்கும் வெண்பாவுரிச்சீராமென்று கூறுவர் புலவர். எ-று. அவை - நேர்நேர்நேர், நிரைநிரைநேர், நேர்நிரைநேர், நிரை. நேர்நேர் எனவரும். இவற்றை மாசெல்வாய், புலிவருவாய், மாவருவாய், புலிசெல்வாய் எனவும்: தேமாங்காய், கருவிளங்ட காய், கூவிளங்காய், புளிமாங்காய் எனவுங்காட்டுக. செய்யுள். 'காமன்கா ணென்று கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை வருவானை - யாமு மிருகுடங்கை யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண்' என நான்கு வெண்சீருங் காண்க. இஃது ஆட்சியுங் குணமுங் காரணமாகப் பெற்ற பெயர், வெண்பாவிற்கும் அதன் பகுதி. யாகிய கலிப்பாவிற்கு முரிமையின். இனிப் பொதுவாக இயற்சி. ரென்றால் இயலிசை மயக்கமாகிய இயற்சீர் நான் கினையும், பொதுவாக உரிச்சீரென்றால் உரியசைமயக்கமாகிய உரிச்சீர் நான்கினையுமே கோடல்வேண்டினார் இத்தொல்காப்பியனா ரென்பது, இச் சூத்திரத்தானும் 'வெண்பா வுரிச்சி ராசிரிய வுரிச்சி ரின்பா நேரடிக்கு” (செய்-உாட) என்பதனானும் பெறுதும்; இதனான் ஆட்சியும் பெற்றாம். இதுவுங் கட்டளையடிக்குஞ் சீர் வகையடிக்குமுரித்து.1 ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே மூவசைச்சீர் உணர்த்துதல் தொடங்கி அவற்றுள் வெண்பாவுரிச்சீர் உணர்த்துகின்றது. (இ-ள்) இயற்சீராகிய ஈரசைச்சீர் நான்கின் பின்னரும் மூன்றாவதாக நேரசை வந்து நிற்பின் நேரீற்று மூவசைச் 1. கட்டளையடி என்றது, ஒற்றும் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமும் நீக்கி நாலெழுத்து முதல் இருபதெழுத்தின்காறும் எழுத்தெண்ணிக் கொள்ளப்படும் ஐவகையடிகளை சீர்வகையடி என்றது, இருசீர் குறளடி, முச்சீர் சீந்தடி, நாற்சீர் அளவடி அல்லது நேரடி, ஐஞ்சீர் நெடிலடி, அறுசீர் முதலாயின கழிநெடிலடி எனச் சர்வகையாற் பகுத்துரைக்கும் ஐவகையடிகளை.