பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் சீராகிய அவை நான்கும் வெண்பாவுரிச்சீர்ாம் என்று கூறுவர் புலவர் எ-று. மேற்கூறப்பட்ட ஈரசைச்சீர் பதினாறின் பின் மூன்றாவது அசையாக நேர், நிரை, நேர்பு, நிரைபு. என்னும் நான்கசைகளையும்சேர்த்துப் பெருக்க மூவசைச்சீர் அறுபத்து நான்காகும். மா, புலி, பாம்பு, களிறு என்னும் வாய்பாடுகளை முதலிலும் வாழ், வரு, போகு, வழங்கு, என்னும் வாய்பாடுகளை இடையிலும், கான், நெறி, காடு, பொருப்பு என்னும் வாய்பாடு களை இறுதியிலும் கூட்டி உறழ மூவசைச்சீர் அறுபத்து நான்காகும். அவற்றுள் இயற்சீர் நான்கின் பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் எனப்படும். உ-ம்: மாவாழ்கான், புலிவாழ்கான், மாவருகான், புலிவரு கான் எனவரும். இவ்வாய்பாடுகளை முறையே தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் எனவழங்குவர் பிற்கால யாப்பியல் நூலார். கக ைவஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை என்ப இளம்பூரணம் : சன்-சானின் வஞ்சியுரிச்சீர் ஆமா றுணர்த்துதல் துதலிற்று (இ - ள்.) வஞ்சியுரிச்சீரெனப் பாகுபட்டன மேற்சொல்லப் பட்ட மூவசைச்சீர் அறுபத்து நான்கு சீரினும் வெண்சீரல்லாத அறுபது மென்றவாறு.1 உதாரணம் (க) நேர் நேர் நிரை - மா வாழ் நெறி நேர் நேர் நேர்பு - மா வாழ் காடு நேர் நேர் நிரைபு - மா வாழ் பொருப்பு நேர் நிரை நிரை - மா வரு நெறி மூவசையான' என்பது பேராசிரியர் கொண்டபாடம் 1. இயற்சீரும் ஆசிரியவுரிச்சீருமாகிய ஈரசைச்சீர் பதினாறினோடு நான் கசைகளையுங்கூட்டிப் பெருக்க அறுபத்துமூன்று மூவசைச் சீர்களாகும். அவற்றுள் மேலைச் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட வெண்சீர் நான்குமல்லாத ஏனைய ራ፡ மூவகை ச் சீர்கள் அறுபதும் வஞ்சிச்சீர் எனப்படும் என்பதாம்.