பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உக 1ெ2. இன். நச்சினார்க்கினியம் : இஃது அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. (இ - ள்.) இவ்வறுபது வஞ்சிச்சீரும் தன்தன் பாவல்லா ஆசிரியம், வெண்பா, கலியுள் வாரா! எ - று. எனவே, சிறுபான்மையான் ஆவன மேற் கூறுதும். உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. இதன்பயன் ஆசிரியவுரிச்சீர் துாங்கலோசையை ஆக்குமாறுபோல, இஃது அகவலோசையை ஆக்காதென்பதாம். ஆய்வுரை : இது வஞ்சியுரிச்சீர்க்குரிய மரபுணர்த்துகின்றது. (இ - ள்.) வஞ்சியுரிச்சீர் அறுபதும் வஞ்சிப்பாவினுளல்லது ஏனைய பாவினுள் வருதல் இல்லை. எ - று. ஆசிரியவுரிச்சீர் ஆசிரிய நடைத்தாகிய வஞ்சிப்பாவினுள் வந்து தூங்கலோசையை ஆக்குவது போன்று ஆசிரியநடைத்தாகிய வஞ்சிப்பாவுக்குரிய சீர்கள் ஆசிரியப்பாவினுள் வந்து அகவலோசையினை ஆக்குமோ என்று ஐயுறுவார்க்கு ஆக்கா என ஐயமறுத்தல் இச்சூத்திரத்தின் பயன் என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்தாகும். உக, வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. இளம்பூரணம் : என்-எனின். இது வஞ்சிப்பாவிற் குரியதோர். மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) வஞ்சிப் பாவினுள் ஒழிந்த சீர்கள்? வரப்பெறும் என்றவாறு, (உக) Gt 1 y in of rfuto uit : இது, மற்றைச்சீர் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. தானடைவின்றே என்பது தச்சினார்க்கினியர் கொண்ட பாடம். 1. தான் அடைவு இன்று' என்னும் பயனிலைக்கு எழுவாயாக முன்னைச் சூத்திரத்திலுள்ள வஞ்சிச்சீர் என்பது வருவித்துரைக்கப்பட்டது. 2. எஞ்சிய-வஞ்சியுரிச்சீரல்லாத ஒழிந்த இயற்சீர், ஆசிரியவுரிச்சீர், வெண்பாவுரிச்சீர் என்பன். இச்சீர்கள் வஞ்சிப்பாவினுள் வரப்பெறும் என்பார், எஞ்சிய வஞ்சிமருங்கின் உரிய' என்றார்.