பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உக tெ A க நச்சினார்க்கினியம் இது மற்றைச்சீர்கள் வஞ்சியுண் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கட்டளையல்லா வஞ்சிப்பாவின்கண் ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்துநான்கும் உரிய. எ-று எனவே, கட்டளையிற் கூறுவாராயிற்று.1 'வசையில்புகழ் வயங்குவெண்மீன்' (பட்டினப்பாலை) எனத் தன்முன்னர்த் தான்வந்தும், 'திசைதிரிந்து தெற்கேகினும்" (பட்டினப்பாலை) என இயற்சீர் நிற்பத் தன்சீர்வந்தும், "தற்பாடிய தளியுணவின்' (பட்டினப்பாலை) எனத் தன்முன்னர் வெண்சீர் வந்தும், "புட்டேம்பப் புயன்மாறி' (பட்டினப்பாலை) என இரண்டு வெண்சீர் வந்தும், 'புள்ளுந்துயின்று புலம்புங்கூர்ந்து' என ஆசிரியவுரிச்சீர் வந்தும் துரங்கலோசை பிறக்கும் என்றுணர்க. ஆய்வுரை : இது, வஞ்சிப்பாவிற்குரியதோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) வஞ்சிப்பாவினுள் ஏனைய சீர்கள் வருதற்குரியன எ- று வஞ்சியுரிச்சீர் பிற பாக்களிற் பயின்று அப்பாக்களுக்குரிய ஒசையையுண்டாக்க மாட்டாது. அவ்வாறன்றி ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் வஞ்சிப்பாவினுள் வந்து வஞ்சிப்பாவின் ஓசையையுண்டாக்குந் தன்மையன. ஆதலின் வஞ்சி மருங்கின் 1. வஞ்சித்தளை மருங்கின் என்னாது வஞ்சி மருங்கின் எனவே கட்டளை யல்லா வஞ்சிப்பாவுக்குரியது இச்சூத்திரவிதி யென்பது பெறப்படும். எனவே கட்டளை பிற்கூறுவாராயிற்று என்றிருத்தல் பொருத்தமாகும். 'இனி, வஞ்சிப்பாவிற்கும் வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய' என முற். கூறியவாற்றான் ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்து நான்குமென எண்பது சீரும் கட்டளையடி பல்வழி உரியவென்பது எய்துவித்ததாம்’ (செய்யுளியல்-உரு) எனப் பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு ஒப்புநோக்கத்தகுவதாகும்.