பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளருஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் யொன்றேயாகலான் இயற்றென்று ஒருமை கூறினன். இடை நின்ற நேரும் நிரையுங் கோடுமென்னாமையின் இங்ங்னந் திரிந்த நிலைமை வஞ்சியுரிச்சீரெனப்படும்.2 இனி, வெண்சீ. ரென்பது எழுவாயாயின் ஈற்றசை நிரையென்பது இயற்சீரின் பெயராதல் வேண்டும். அங்ங்னங் கருதினும் அசையென்பதனை ஒருகாற் சொல்லி ஈற்றசை நிரையசையென லாகாதென்பது. அல்லது உம் வெண்சீரினை இயற்சீராக்கி அவ்வியற்சீரினை வெண்சீராக்குதல் வினையிலுழப்பாகி வரம்பின் றாமென மறுக்க. என்றார்க்குத் தன்சீருள்வழித் தளைவகை வேண்டானேல்’ 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்” (கலி. 11) என்பதுTஉங் கலித்தளையன்றாகிய செல்லுமென்பது. கலிப்பா விற்கு ஒன்றாது வருதல் உரிமையுடைய வெண்சீரெனவே வெண்பாவிற்கு ஒன்றாது வருதல் யாண்டுமில்லை, ஒன்றி 1. வெண்சீரின் ஈற்று நின்ற சீரின்முதல் வந்த நேர் ஒன்றேயாதவின் நிரையசை இயற்று என ஒருமையாற் கூறினார். 2. வெண்சீரின் ஈற்றசை வருஞ்சீர் முதலொடு தட்குங்கால் நிரையசை. யியற்றாய்த் திரியுமெனக் கூறின் அங்கனந்திரிந்தநிலைமை வஞ்சியுரிச்சீரெனப் படும். 3. இவ்வுரைப்பகுதி இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் எழுதியவுரையினை மறுப்பது போன்றுளது. வெண்சீரீற்றசை என்பதை எழுவாயாக்கி இயற்சீர்' என்பதனை அதிகாரத்தால் வருவித்து, வெண்சீரீற்றசை (இயற்சீர்) நிரையசை யியற்று' என இயைத்து, வெண்சீரீற்றசை தளைவழங்குமிடத்து இயற்சீரசை திரையிறுபோலும் என உரைவரைந்தார் இளம்பூரணர். இவ்வுரையினை மறுக்கும் நிலைமையிற் பிறன்கோளாக அமைந்த மேற் காட்டியவுரைப்பகுதி ஏடுபெயர்த்தெழுதுவோரால் சொல்லமைப்பு மாறிப் பொருட்டெளிவின்றியுள்ளது. இது மேலும் ஆராய்தற்குரியதாகும், 4. அவ்வப்பாவுக்குரிய தன்தன்சீர்வந்து பாவின் ஒசையை நிரைத்த நிலைமைக்கண் தளைகோள் ஆகிய தொழிலை நோக்குதல் இன்றியமையாததன்று என்னும் பொருளில் அமைந்ததே தன் சீருள்வழித்தளைவகை வேண்டா என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். "தன்சீருள்ள நிலைமைக்கண் தளைத்தற் றொழிலாகிய அமைப்பு தேவையில்லை' எனத் தளையின் கட்டுக்கோப்பினை விலக்குதல் இச்சூத்திரத்தின் பொருளன்றாம். மாறாகத் தன்சீருள்வழித் தளையமைப்பே வேண்டுவதில்லை யென்பதே ஆசிரியரது கருத்தாகக் கொள்வோ மானால் , அரியதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்’ எனக் கலித்தளை பிறழாது வந்த அடியும் கலியடி யன்றெனக்கூறும் தவறான நிலையேற்படும்.