பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஅ வருக வரினல்ல தென்பது உடம்படப்பட்டது. (உகூ) நச்சினார்க்கினியம் : இது வெண்சீராற் கலித்தளையாமாறுணர்த்திற்று. கவிக்கு விலக்கிய நேரீற்றியற்சீரதிகாரம் பற்றி இயற்சீர் கூறியதல்லது கலியதிகாரம் விலக்காமை யுணர்க.2 (இ-ள்.) வெண்சீரீற்றசை எ-து வெண்சீர்கள் பல தொடர்ந்து ஒருகலியடியுள் நின்றவழி அவ்வெண்சீர்களுள் ஈற்றுநின்ற சீரின் முதல்வந்த நேரசை நிரையசையியற்று எது மற்றை நிரைமுதல் வெண்சீர் வந்து கவிந்தளை யாயவாறு போலக் கலித்தளையாம் எ- று. என்றது, வெண்சீர்ப்பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்தது என்றார். அதுவுமன்றி வெண்சீர் நான்கும் ஒன்றினும் அது வெள்ளோசையையும் தருதலிற் கட்டளையாகாமைகருதி முன்னர் மூன்று சீரும் பகைத்தே வரல் வேண்டும் என்றும், அவை தம்முட்பகைத்தலிற் பின்வருஞ் சீர் ஒன்றினும் பகைத்த தன்மை யேயாய்த் துள்ளலோசையே நிகழ்த்துமென்றுங் கூறினார். வெண் சீர் என்றது அஃறிணையியற்பெயராதலிற் பன்மைப்பாற் படவுணர்க. வெண்சீர்களுள் என ஏழனுருபு தொக்கது. ஈறு என்றது இறுதிச்சீரை. ஈற்றசையென்றது இறுதிச்சீரினுடைய அசையென்றவாறு.8 உ-ம். அடிதாங்குமளவன்றி யழலன்ன வெம்மையால்' (பாலைக்கலி-கC) என இவ்வெண்சீர்கள் பகைத்து வந்து ஈற்றசைச்சீரின் முதற்கணின்ற நேரசை நிரையசை போலத் துள்ளலோசை கோடலிற் கலித்தளையாயிற்று. இது கட்டளைக்கே யென்பது. தளைவகை சிதையாத் தன்மை யான' (செய்-உஅ) என நின்ற அதிகாரத்தாற் கொள்க. 1. வெண்சீர், வெண்பாவிற்கும் கலிப்பாவிற்கும் தன்சீரேயாயினும் கலிப்பாவிற்கு ஒன்றாது வருதல் உரிமையுடையது. எனவே, வெண்பாவிற்கு ஒன்றி வரினல்லது ஒன்றாது வருதல் யாண்டும் இல்லை எனக் கலித்தளையினையும் வெண்டளையினையும் ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சூத்திரத்தால் உடன் பட்டமையுய்த்துணரத் தகுவதாகும். 2. பேராசிரியர் உரையினையே அடியொற்றியது இவ்வுரைப் பகுதியாகும். 3. ஈற்றசை யென்றது, ஈற்றுச்சீரின் முதல்நின்ற நேரசையினை.