பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இt இட தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஒழிந்தவடி நான்கும் விகற்பத்தொடை கொள்ளாமையும் உணர்க. ஆய்வுரை : இது, தளைக்கும் தொடைக்கும் ஆவதோர் இடம் உணர்த்துகின்றது. (இ.ஸ்) மேற்கூறிய நாற்சீரடியின்கண் உள்ளனவே தளையும் தொடையும் எறு. ஈண்டுத் 'தளை என்றது, எழுத்தெண்ணி வரையறுக்கப்படும் கட்டளையாகிய ஒசைக் கூறுபாட்டினை. எனவே ஒசைக் கூறுபாடாகிய கட்டளைப்படுத்துக் கூறப்படுவதும் இந்நூலில் தொடைகளை உறழ்ந்து தொகை கூறுதற்கு இடனாயமைந்ததும் நாற்சீரடியாகிய நேரடியே என்றாராயிற்று. ங், ங் . அடி இறந்து வருதல் இல்லென மொழிப. இனம் பூரணம் : என்-எனின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் துதலிற்று. (இ-ள். தளையுத் தொடையும் நான்குசீரடியின் வருத லன்றி யடியி னிங்கிவருத லில்லை யென்றவாறு. அடிவரையறை யில்லாதனவற்றிற் கொள்ளப்படாது என்ற வாறாம்.2 {Eடங்) இதுவுங், கட்டளைப்பாட்டிற்குந் தொடைக்கும் ஆவதொரு கருவி யுணர்த்துதல் நுதலிற்று. 1 விகற்பத்தொடை என்பன மோனை முதலிய தொடைகளின் வகை யாகிய இணை, பொழிப்பு, ஒரூஉ, கீழ்க்கதுவா ப், மேற்கதுவாய், முற்று என்பன . 2 பாவின் அடியிற் கொள்ளுதற்குரியனவாகிய தளையும் தொடையும் அடிவரையறையில்லாத உரை முதலியவற்றிற்கொள்ளப்படா என்பதாம். அடிவரையறையில்லாதனவாவன 'பாட்டு உரை நூல் முதலாக எழுநிலத் தெழுந்த செய்யுட்களுள் பாட்டு நீங்கலாகவுள்ள ஏனைய உரைமுதலிய ஆறுமாகும்.