பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ங் (E. 德雷@了座一 (இ-ள்.) அறுநூற்றிருபத்தைந்து அடியுள்ளும் ஒரடியின் இறந்துவாரா மேற்கூறிய தளையுந் தொடையும் (எ-று). என்றது, மேற்கூறிய தளைவகையேயன்றி அடியோடு அடிக்கூட்டத்துத் தளைகொள்ளுங்காலும் ஒரடிக்கண்ணே வழுவாமற் கோடல் வேண்டுமெனவும், அங்ங்ணமே தொடை கொள்ளுங்காலும் வந்த வந்த அடியே வரப்பெறுவதெனவுங் கூறியவாறு: எனவே, தேமா தேமா தேமா தேமா வென்னும் அடிக்கண் தொடை கொள்ளுங்கால், 'வாமா னேறி வந்தான் மன்ற’’ என முன் வந்த அடியே வரல்வேண்டுமென்பது உம் அன்றித் 'தேமாஞ் சோலைத் தீந்தே னு,ண்ட காமர் தும் பி யாதல் கண்டது” என வரில் தளைவழுவாகிப் பதின்மூவாயிரத்தெழுநூற்றெட் டெனப்பட்ட தொடைப்பகுதியுட் படாவென்பது உம் பெற்றாம். இனி வெண்பாவினுள் அவை வருமாறு : சென்றே யெறிய வொருகால் சிறுவரை நின்றே யறைப பறையினை-நன்றேகாண்' (நாலடி. 24.) எனப் பன்னிரண்டெழுத்தடி ஒன்றினையும் இருகாற் சொல்லிக் கூட்டி எதுகைத்தொடை கொள்ளுங்கால் அடியோடு அடிக் கூட்டத்துத் தளைவகை சிதையாது வந்தமையின் அத்தொடை பதின் மூவாயிரத் தெழுநூற்றெட்டென வரையறைப்பட்ட தொடையுட்பட்டது. “யானுரடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானுரட யானுணர்த்தத் தானுணர்ந்தான்-றேனூடு” (முத்தொள்ளாயிரம், 104) என்ற வழிப் பதினான்கெழுத்தடியே தொடுத்தமையின் அடி 1. அடியிறந்துவருதல் இல்லையென்றது, தளையுந்தொடையும் உறழ் தற்கென எடுத்துக்கொள்ளப்பட்டநாற்சீரடியின் அமைப்பினைக் கடந்து தளையும் தொடையும் கொள்ளப்படுதல் இல்லையென்பதாம். 2. ஒரடியோடு மற்றோரடி இயைந்துகூடிய நிலைமைக்கண் தளைகொள்ளு மிடத்து அவ்வடியமைப்பின் வழுவாமையும் தளைகொள்ளுதலும், அவ்வாறே தொடை கொள்ளுமிடத்து முன்வந்த அடியமைப்பினையே பின்வந்த அடியும் பெற்றிருத்தலும் வேண்டும் என்பதாம்.