பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

és GT -9J தொல்காப்பியம் - பொருளதிகாரம்- உரைவளம் ஒழிந்த அடிகளானும் அவ்வாறு வருமாயினும் அவை சிறப்பில வென்பது.1 (இ-ள்) அடியின் சிறப்பென்பது-அடி இரண்டும்பலவும் அடுத்துவந்த தொடையே பாட்டு (எ-று.)? தலை யிடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீ ரடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும் பான்மையுஞ் செய்தார்; வஞ்சிப்பாச் சிறுவரவிற்றெனக் கொள்க.3 "மாயோன் மார்பி லாரம் போல மணிவரை யிழிதரு மணி கிள ரருவி நன்பொன் வரன்று நாட னன்புபெரி துடைய னின்சொல் லினனே' (தொல், செய், 78, 157 பேர்.) என நாற்சீரடியான் ஆசிரியம் வந்தவாறு. 'மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர்' (நாலடி 21) என அளவடியானே வெண்பா வந்தவாறு, முன் பக்கத் தொடர்ச்சி - த அசை சீர் தொடை முதலாக அளவியல் கூறிய மற்றையுறுப்புக்களைக் கொண்டு இன்ன செய்யுள் என்று வரையறுத்தல் இயலாதென்பதும் அடியின் அளவே கூறச் செய்யுள் இதுவென்பது நன்கு புலனாம் என்பதும் கருத்து. 1. எனப்படும்' என்றதனால் நாற்சீரடியொழிந்த நெடிலடி கழிநெடிலடி முதலியவற்றாலும் செய்யுள் வருமாயினும் அவை அத்துணைச் சிறப்பில என்பதாம். 2. அடியின் சிறப்பு' என்றது, அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையினை எனக்கொண்டார் பேராசிரியர். 3. தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கடைச்சங்கத்தாரும் ஆகிய நல்லிசைப் புலமைச் சான்றோரும் பிற்காலத்துச் சான்றோரும் நாற்சீரடியால் வரும் ஆசிரியப்பாவும் வெண்பாவும் கவிப்பாவும் ஆகிய பாக்களையே பெரும்பாலும் இயற்றினார்கள் என்பதும், அக்காலத்தில் அளவடியிற்குறைந்த வஞ்சிப்பா சிறுவரவினதாக இயற்றப்பெற்றதென்பதும் கூறி, இவ்வாறு சங்ககாலத்து நாற்சீரடியாலியன்ற பாக்களே பெரும்பாலும் இயற்றப்பெறுதற்கு அடியின் சிறப்பேபாட்டெனப்படுமே எனவரும் இத் தொல்காப்பிய விதியே காரணம் எனப் பேராசிரியர் கூறும் விளக்கமாகும். இது தமிழிலக்கிய வரலாற்றிற் சிறப்பிடம் பெறத் தகுவதாகும்.