பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க. ச 岔葬G了浣下 எனவே இவ்வியலில் தளைப்பகுதியாற் கட்டளையடியென வைத்துப் பெருக்கிக் கூறப்படுதலும் அறுநூற்றிருபத்தைந்து என்னும் அடிவரையறையும் தொடைவகை பற்றிய தொகையும் எல்லாம் நாற்சீரடியாகிய அளவடிக்கேயுரியன என்பது நன்கு பெறப்படும். க ச அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. இாைம்பூரணம் : என்.எனின் இதுவும் அடிக்குரியதோர் சிறப்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படு மென்றவாறு.1 எனவே, பாட்டென்னுஞ் செய்யுட்கு அடியின்றியமையா தென்றுகொள்க. பாட்டாவன:- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்பன. இனி அவ்வடியினை எழுத்தளவினாற் குறியிடுகின்றார். (க.க) இது, நாற்சீரடியை விசேடித்துக் கூறி, அதனது இடத் தானே? பாட்டென்பதொரு முதற்பொருள் தோன்றுமென்ப துணர்த்தியவாறு எனப்படும்’ என்றதனான் இவ்வடிகளான் வந்த செய்யுளே சிறப்புடையனவென்பதுTஉஞ் சொல்லியவாறு. மாத்திரை முதலிய மற்றை உறுப்புக்களான் இத்துணை மாத்திரை கொண்டது செய்யுளென்றானும், இத்துணை அசையுஞ் சீருந் தொடையுங் கொண்டது செய்யுளென்றானும் அளவியல் கூறிய உறுப்புக்களான் வரையறுக்கப்படா. அடியளவே கூறச் செய்யுட்புலப்பாடாமென்பது?, எனப்படும் என்றதனான், 1. அடியின் சிறப்பமைதிகொண்டே இஃது இன்ன பாட்டு என்று பகுத்துரைக்கப்படும் என்பதாம் . எனவே நால்வகைப் பாக்களுள் இஃது இன்ன பாட்டு என்று அறிந்து கொள்ளுதற்குக் குறளடி சிந்தடி அளவடி முதலிய அடியின் சிறப்பியல்பே காானமாகும் என்பது கருத்து. 2. அதன் திட்டத் தானே - உ. வே. 3. இவ்வளவு மாத்திரை கொண்டது இன்ன செய்யுள் என்றோ இவ்வளவு, அசையும் சீரும் தொடையும் கொண்டது இன்ன செய்யுள் என்றோ மாத்திரை