பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூரு ఫ్రif áT jáy 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்' (கலி. 11) எனக் கலிப்பா அளவடியான் வந்தது. பிறவு மன்ன. (ங் ரு) நச்சினார்க் திரிையம் : இதுவும் அந்நாற்சீரடியின் சிறப்புக் கூறுகின்றது. (இ - ள்.) அடியின்பாட்டே எ.து அந்நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டையே எறு. சிறப்பெனப்படுமே எ-து சிறப்புடைப்பாட்டென்று கூறப்படும். எ-று. அடியினாற் செய்யுள் வரையறை கூறலின்றி மாத்திரை முதலிய உறுப்பான் இத்துணைப்படுஞ்செய்யுளென்று வரையறை கூறப்படாமையின் அடியான் வந்ததே பாட்டென்றார். அது மூவகைச் சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீரடியானே மூன்று பாவும் வரப் பெரும்பான்மை செய்யுட் செய்து, வஞ்சிப்பா சிறு வரவிற்றாகச் செய்யுள் செய்தவாற்றானுணர்க. ஆய்வுரை : இதுவும் மேற்குறித்த அடிக்குரியதோர் சிறப்புணர்த்துகின்றது. (இ-ஸ்) அடி இரண்டும் பலவுமாகச் சிறந்து அடுக்கித் தொடர்ந்து வருவதே பாட்டென்று சொல்லப்படும் எ-று. ஈண்டுச் சிறப்பு’ என்றது இரண்டும் பலவுமாகித் தொடர்ந்து வருதலை. நாற்சீரடிகளான் வந்த செய்யுளே சிறப்புடையன எனவும், அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு’ எனவும், 'தலை இடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீரான்வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே செய்தார்; வஞ்சிப்பா சிறுவரவிற்றெனக் கொள்க’ எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைத்தற்குரியதாகும். கடரு. நாலெழுத் தாதி ஆக ஆறெழுத் தேறிய நிலத்தே குறளடி யென்ப. இளம்பூரணம் : என் - எனின். குறளடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று 1. பேராசிரியர் உரையைத் தழுவி இச்சூத்திரத்திற்கு விளக்கம் எழுதியுள்ள நச்சினார்க்கினியர், அவ்விளக்கத்திற்கு மாறாக அடியின் பாட்டே சிறப்பெனப்படுமே என இங்ங்னம் பொருள் தெளிவின்றி உரை எழுதியிருப்பாரா என்பது ஆராயத்தகுவதாகும்.