பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க #3. ஆறிய எழுவகையோத்தும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது @ఖ L57ఒ4, இது செய்யுட்கே உரித்தென்பது உம் பெற்றாம். மற்றிதனை யாப்பதிகாரமென வேறோரதிகாரமாக்கி உரைப்பாரு முளர்; அங்ங்னங் கூறின் வழக்கதிகாரமெனவும் வேறு வேண்டு மென மறுக்க: அல்லது உம் எழுத்துஞ் சொல்லும் பொருளு மென மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி அதிகாரமொன்றற்கு ஒன்பதோத்தாகத் தந்திரஞ் செய்ததனோடு மாறுகோளாம் இதனை வேறதிகாரமென்பார்க்கென்பது, மற்று, ஒத்துதுதலிய தெல்லாம் துதலுவதன்றே ஒத்தினுள்வைத்த சூத்திரம்; அதனான், இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவ்வோத்தினு ளுணர்த்தப்படுகின்ற செய்யுட் குறுப்பாவன இவையெனவே,2 அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் துதலிற்று.8 (இ-ள்.) இக்கூறப்பட்ட முப்பத்துநான்கும் பேரிசைப்புலவர்4 செயப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென அவ்வாறு செய்தல் வன்மையால் கூறினார் புலவர் எ று ). அப்பெயர்-பெயர்: அம்முறை-முறை; அத்தொகை-தொகை. தொகை ஆறுதலையிட்ட அந்நாலைந்து மெனவும், எட்டென வும் இருவகையால் தோன்றக் கூறியது, ஏனைய போலாமல் AASAASAASAASAA 1. பொருளதிகாரத்தின் பகுதியாகிய செய்யுளியலை யாப்பதிகாரமென வேறோரதிகாரமாக்கியுரைப்பவர் இறையனார் களவியலுரையாசிரியர். தமிழ் அான் நான்கு வகைப்படும் எழுத்துஞ்சொல்லும் பொருளும் யாப்பு:மென' என்பது இறையனார் களவியலுரை. வழக்குஞ் செய்யுளும் ஆகியவிரண்டனுள் யாப்பினை மட்டும் பிரித்துத் தனியதிகாரமாக்குதல், இயற்றமிழிலக்கணத்தினை எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றதிகாரமாகக்கொண்டு ஒவ்வோரதிகாசத்' தினையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பகுத்துரைத்த தொல்காப்பியனாரது நூலமைப்புக்கு மாறுபட்டதாம் என்பது பேராசிரியர் கருத்தாகும். 2. இவையென' என்றிருத்தல் பொருத்தம். 3. இயலின் முதற்கண் உள்ள சூத்திரம் அவ்வியலிற் கூறப்படும் பொருள் களைத் தொகுத்துச் சுட்டுவதாக அமைதல் வேண்டும். 4. நன்று பெரிதாகும்' எனவரும் உரியியற் சூத்திரத்தையுளங்கொண்டு 'நல்லிசைப்புலவர்' என்பதற்குப் பேரிசைப்புலவர் எனப்பொருள் வரைந்தார். பேரிசைப் புலவரால் பா. வே.