பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆா தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் எட்டுறுப்பும் ஒரோர் செய்யுட்கு ஒரோவொன்றேயும் வருமென்ப தறிவித்தற்கும், அவைதாம். அச்செய்யுள் பல தொடர்ந்த வழியே பெரும்பான்மையும் உறுப்பாமென்ப தறிவித்தற்கும் அவ்வாறு கூறினார் என்க. எனவே, ஒழிந்த உறுப்பிருபத்தாறும் ஒன்றொன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். இனி மாத்தினரி யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரை களைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவையென்றவாறு. மாத் திரையது மாத்திரையினை ஈண்டு மாத்திரையென்றான். அது மாத்திரையளவும், (314) என்றதனாற் பெற்றாம். எழுத்தியல் வகையென்பது, மேற்கூறிய எழுத்துக்களை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு. அசைவகை யென்பது, அசைக்கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம். யாத்தசீரென்பது, (360) பொருள் பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு: எனவே, அசைபல தொடர்ந்து சீராங்கால் அவ்வசையுந் தத்தம் வகையாற் பொருள் பெற்று நிற்றலும் அவ்வாறன்றிச் சீர்முழுதும் ஒரு சொல்லாங்கால் அவ்வசை பொருள் பெறாது நிற்றலும் அடங்கின. தேமா என்று அசை பொருள் வேறுபெற்றன; சாத்தன் எனப் பொருள் வேறு பெறாது நின்ற அசையாற் சீர் யாத்து நின்றது. பொருள்பெற நின்ற எழுத்தும் அசையுஞ் சிறப்புடைய வென்பாருமுனர். அற்றன்று, பொருள்பட நிற்பன 1. அவைதாம் என்றது அம்மை முதலிய எட்டினையும். இவைபெரும் பாலுந் தொடர்நிலைச் செய்யுட்கே உறுப்பாவன. 2. இருபத்தாறாவன மாத்திரைமுதல் வண்ணம் ஈறாகச் சொல்லப் பட்டவை. இவை இருபத்தாறும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாய் ஒவ்வொரு செய்யுட்கும் இன்றியமையா உறுப்புக்களாகும். 3. மாத்திரை - அளவு எழுத்திற்குச் சொல்லிய மாத்திரையினது அளவு மாத்திரையென்னும் உறுப்பாகும், 4. மேல் எழுத்ததிகாரத்துக்கூறிய எழுத்துக்களைச் செய்யுளுக்கேற்ப இயற்றிக்கொள்ளுங்கூறுபாடு. 5. முற்கூறிய எழுத்தாலாகிய அசைகளின் கூறுபாடு , பொருள்பயந்து நிற்பன சிறப்பசை என்றும், மொழிக்கு உறு நிற்பன சிறப்பிலசை என்றும் வழங்குப' எனவும் சீர்:பின் பொருள்பயந்து நிற்பனவற்றைச் சிறப்புடைச்சீர்" எனவும் வகையுளிசேர்ந்து நிற்பனவற்றைச் சிறப்பில்சீர் என்றும் சொல்வார் எனவும் வரும் யாப்பருங்கலவுரைப்பகுதி இங்ங்னங்கூறுவார் கூற்றை யெடுத்துரைத்தல் காணலாம்.