பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க ஆதி தீ அவர்க்கும் இவர் முடிவே பற்றித் தளை களையல்வேண்டும். அல் லது உம், இவர்க்கு இளையரான காக்கைபாடினியார் தளை கொண்டில ரென்பது இதனாற் பெற்றாம். தளைவேண்டினார் பிறகாலத்து ஒராசிரியரென்பது. என்னை ? 'வடக்குங் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பெளவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்" எனக் கூறி வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறியவாற்றானே எல்லைகொண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கை பாடினியத்து, 'வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்" (தொல்-பொருள். 650) எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தா ரல்லரென்பது உங், குறும்பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்றென்பது உம் பெற்றாம். பெறவே, அவர் இவரோடு ஒருசாலை மாணாக்கரல்லரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்பது.1 1. இணைநூன் முடிபு தன்னுான் மேற்றே" எனப் பேராசிரியருரையிற் காணப்படும் பழஞ்சூத்திரம், ஒருகாலத்து வாழ்ந்த கருத்தொற்றுமையுடைய ஆசிரியர் இருவர் செய்த இரண்டு நூல்களுள் ஒன்றிற்கூறிய முடிபு மற்றொன்றிலும் பொருந்தியமைதல் வேண்டும்' என்னும் கொள்கையினை விதிப்பதாகும் எனக்கருதவேண்டியுளது. தொல்காப்பியனாருடன் ஒருசாலை மாணாக்கராய் அகத்தியனார்பால் தமிழ் பயின்ற காக்கைபாடினியார் என்ப வரையே இவர்க்கு (தொல்காப்பியனார்க்கு) இளையரான காக்கைபாடினியார்’ எனப் பேராசிரியர் குறித்துள்ளார். தொல்காப்பியனாருடன் பயின்ற காக்கைபாடினியார் தொல்காப்பியனார்போலவே செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகத் தளை என்பதனைக் கொள்ளவில்லையென்பதும் தளையினைச் செய்யுளுறுப்பாகக் கொண்ட காக்கைபாடினியார் என்பவர் தொல் காப்பியனார் வாழ்ந்த காலத்திற்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய மற் றோராசிரியர் என்பதும், தொல்காப்பியனாருடன் ஒரு சாலைமாணாக்கராகிய காக்கைபாடினியார் என்பவர் தம் காலத்தில் வாழ்ந்த பனம்பாரனார் கூறிய வாறே தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமெனவும் தென்னெல்லை குமரியா றெனவும் குறித்துள்ளார் என்பதும், தொல்காப்பியனார் காலத்திற்கு நெடுங்