பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகி அச் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இஃது ஐந்தெழுத்தாற் றன்சீரடிவந்தது. ‘ஆடுகொடி துடங்கு காடு போந்து விளங்கிழை நகர்வயிற் சேர்ந்தன. முழங்குக வானந் தழங்குகுரல் சிறந்தே" இஃது ஏழெழுத்தாற் றளைநிலையடி வந்தது. வகையென்ற தனான் இயற்சீர்ப்பாற்படுத்திய அசைச்சீர் இன்சீராய்த் தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் வரும். இஃது இருவகை படிக்கு மிலக்கணங் கூறிற்று. பேராசிரியம் : இது, மேல் ஆசிரியத்திற்குத் தன் சீர்வகையுந் தன்றளை வகையுங் கூறிய வழியானே வெண்பாவிற்குச் சீர்வகையுந் தளை வகையுங் கூறுகின்றது. (இ - ள்.) தன்சீர்-வெண்சீர் உள்வழி-வெண்சீரே வருஞ் சீராகியும் வந்தவழி; என்னை தளைவகைக்கு இரண்டுசீர் வேண்டுதலானுந் தளைவகை வேண்டாத நிலம் இதுவென்கின் றானாகலானுமென்பது; தளைவகை வேண்டா-தளைவகை நிலைமை கொள்ளப்படா மற்று அவ்வடிக்கண் (எ - று) எனவே, வெண்சீர்நிற்ப இயற்சீர் வந்தொன்றின் வெண் டளையாமென்பதே கருத்தாயிற்று. இஃது உய்த்துக்கொண் டுணர்தலென்னும் உத்திவகை, (மரபு 110) இதனானே வெண் சீர்க்கு வெண்சீர் வந்தொன்றுவது கட்டளையடியெனப்படாது சீர்வகையடியாமென்பது பெற்றாம்.1 "வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல்’ "வெண்சீ ரொன்றினும் வெண்டளை யாகும் இன்சீர் விரவிய காலை யான” என்றார் காக்கைபாடினியாரும்.2 ஈண்டுத் தன் சீர் என்றது, வெண்பாவுக்குரிய தன்சீராகிய வெண்: :) r வெண்சிரே வாள்.சீராகியும் கவ:மி + க்கன் தளைவு கை *i li : :i , 1:51 3: fಓ5} ருளுசராகயும் வநதவழி அவவடிககன தக z* நிலைமை கொள்ளப்படா. எனவே வெண்சீர்திற்ப இயற்சீர் வந்து ஒன்றின் வெண்டளையா மென்பதும் வெண்சீர்க்கு வெண்சீர்வந்து ஒன்றுவது சீர்வகை:படியாம் என்பதும் பெறப்படும். 2. இவ்விரு நூற்பாக்களையும் இயற்றிய காக்கைபாடினியார் என்பவர் தொல்காப்பியனார் காலத்தவர் ஆவர்.