பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச உன்கு நேரும் நிரையும் இரண்டசைக்கும் பொதுப்படக் கூறினமை யின், நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையெனவும் நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத் தளையெனவும் கொள்க என்றாராயிற்று. ருச. குறளடி முதலா அளவடி க்ரீறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப. இாைம்பூரணம் : என்-எனின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) குறளடி முதலாக அளவடியளவும் வஞ்சியுரிச் சீர் வந்து உறழுநிலையில; இவ்வடிகள் இயற்சீரும் ஆசிரியவுரிச் சீருமாம் என்றவாறு.1 எனவே, பதினைந்தெழுத்து முதலாக நெடிலடியினுங் கழி நெடிலடியினு மெய் யுறழப்பெறுவ தென்றவாறாம் 2 எடுத்தோத்துப் பெரும்பான்மை. அளவடிக்கண் வஞ்சியுரிச்சீர் மயங்குப வுளவேல் மேற் கொள்க. (ருச) இது, வஞ்சியடி யுறழுமாறும் அதுபெறும் நிலனும் உணர்த் துதல் துதலிற் று. (இ - ள்) நாலெழுத்து முதலாகப் பதினான் கெழுத்தளவும் உறழும் நிலையில வஞ்சியடிக்கு (எ . லு) . இனி, முதலும் ஈறும் யாதெனப்படுமோவெனின், "தன்சி ரெழுத்தின் சின்மை மூன்றே (தொல்-செய்-46) 1. நாலெழுத்து முதலாக வரும் குறளடி முதல் பதினான்கெழுத்தீறாக வரும் அளவடியீறாக வரும் ஆசிரியவடியின்கண்ணே வந்து உறழும் நிலை வஞ்சி யுரிச்சீர்க்கு இல்லையெனவே ஆசிரியப்பாவின்கண்ணே வரும் குறளடி சிந்தடி, அளவடி யென்னும் இவ்வடிகள் இயற்சீரும் ஆசிரியவுரிச்சீருமாக வரப்பெறும் என்பதாம் . 2. மெய் யுறழப்பெறா தென்றவாறாம்' என்ற பாடமே பொருத்தமுடைய தாகும். இங்ங்ணம் கூறவே பதினைந்தெழுத்து முதல் பதினேழுவரையுள்ள நெடிலடியினும் பதினெட்டுமுதல் இருபத்தெழுத்தீறாக வரும் கழிநெடிலடியினும் வஞ்சியுரிச்சீர்கள் வரப்பெறா என்பதாம். சிறப்புவிதியாகிய இது, பெரும் பான்மைபற்றியமைந்ததாதலின், சிறுபான்மை ஆசிரியப்பாவின் அளவடிக்கண் வஞ்சியுரிச்சீர் வந்து கலப்பனவுளவேற்கொள்க என்றார்.