பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.5 சின் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்றதனான் ஆறெழுத்தடி முதலாகவும், நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்’ (தொல்-செய்-42) என்றதனாற் பன்னிரெண்டெழுத்தடி யீறாகவும் உறழுமென்ற வாறு. எனவே வஞ்சியடிக்கு நிலன் ஏழென்பது சொல்லிய வாறு. அதுவே கருத்தெனின், இச்சூத்திரம் மிகையாம் பிற வெனின், அற்றன்று; வஞ்சியுரிச்சீர் மூன்றெழுத்திற் சுருங்கா, ஆறெழுத்தின் ஏறாவெனவே நேர்நிலைவஞ்சிக்கு மூவெழுத்துச் சீர் இரண்டுவந்த இருசீரடிக்கு ஆறெழுத்துமுதலாமென்பது உம் ஆறெழுத்துச்சீர் இரண்டுவரிற் பன்னிரண்டெழுத்தடி ஈறா மென்பது உம் பெறுதுமால் அவ்வச்சூத்திரங்களானே யெனின், ஆண்டு வஞ்சிபுரிச்சீர்க்கு எழுத்துவரையறை கூறினான்; அவ்வடி இத்துணைநிலம் பெறுமென்றற்கு இது கூறல்வேண்டுமென்பது : அல்லது உம், அங்ங்ணம் கொள்ளின் உய்த்துணர்ச்சியாம், இஃது எடுத்தோத்தாகலின் எடுத்தோத்துக் களைந்து உய்த்துணரார் என்பது. இனி, இது கூறாக்காற் கட்டளையடிக்கண் இயற்சீர் வாராதென்பது உம் பெறலாகாதாம். ஆகவே, ஞாயிறு புலி செல்சுரம் என்பது கட்டளையடியாகிய செல்லும்; வஞ்சித் தூக்கின் அது கொள்ளாமையின் அது விலக்கல் வேண்டி இது கூறினான்; என்னை? இயற்சீர்கொள்ளின் ஒரெழுத்தானாகிய இயற்சீரும் ஆண்டே கோடல்வேண்டும்; அது கொள்ளின் இச்சூத் கிரத்திற்கு ஏலாமையினென்பது: 1. தன்சிரெழுத்தின் சின்மை மூன்றே நேர்நிலை வஞ்சிக்கு ஆறுமாகும்’ என்ற சூத்திரங்கள், வஞ்சியுரிச்சீர்க்குரிய எழுத்துக்களின் சுருக்கமும் பெருக்கமுங் கூறின. இருசீரடியாகிய வஞ்சியடி ஆறெழுத்தடி முதலாகப் பன்னிரண்டெழுத்தடிவீறாக ஏழுநிலம் பெறும் என்றற்கு இச்சூத்திரம் கூறப்பட்டது. எடுத்தோத்து இல்வழியே உய்த்துணர்தல் வேண்டும். இச்சூத்திரமாகிய எடுத்தோத்து உள்வழி உய்த்துணர்ச்சி வேண்டுவதில்லை யென்பதாம். 2. குறளடியின் கீழெல்லையாகிய நாலெழுத்து முதலாக அளவடியின் மேலெல்லையாகிய பதினான்கெழுத்தீறாகப் பெருக்கிப்பெறும் நிலன்கள் வஞ்சியடி பெறுதல் இல' எனவே குறளடியின் மேலெல்லையாகிய ஆறெழுத்தடிமுதல் அளவடியின் நடுவெல்லையாகிய பன்னிரண்டெழுத்தடியிறாக வஞ்சியடி ஏழுநிலம் பெறும் எனக்கொள்வர் பேராசிரியர். இவ்விதி கூறாதொழியின், ஞாயிறு புவிசெல்சுரம் , என்பது கட்டளையாகக் கொள்ளவேண்டி வரும். வஞ்சித்துக்கின்கண் அதுகொள்ளத்தக்கது அன்மையின் அதனை விலக்குதல் வேண்டியும், வஞ்சியடியின்கண் இயற்சீர்வருமெனக்கொள்ளின் ஒரெழுக்காகிய இயற்சீரும் கொள்ளவேண்டிவரும், அவ்வாறு கொள்ளுதல்