பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丐、 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம் :- இவ்வோத்தினுள் மேற்கூறுகின்ற செய்யுட்கு உறுப்பாவன இவையென்று அவற்றது பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) மாத்திரையென்றது எழுத்திற் குரித்தாக எழுத்ததி காரத்தோதிய மாத்திரைகள் தத்தம் அளவின் இறந்து பாவின் ஒசை வேறுபாடுகளையுணர்த்தி விராஅய் நிற்கும்நிலையை: மாத்திரையென்றது மாத்திரையளவை என்பது உம், எழுத்தியல் என்றது எழுத்தியல்வகையை என்பது உம் மேலைச்சூத்திரத்தாற் பெறுக. எழுத்தியல்வகையென்றது எழுத்ததிகாரத்துக் கூறிய எழுத்துக்கள் செய்யுட்கியலும் வகையை. அசைவகை யென்றது இயலசையும் உரியசையும் என இருவகையாம் அசைக் கூறுபாட்டினை. யாத்தசீர் என்றது பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரை: எனவே அசையும் தனித்தனியே பொருள்பெறுவனவும் தனித்தனிப் பொருளின்றிச் சீராய வழிப் பொருள் பெறுவனவும் என இருவகையாம் ; தேமா, சாத்தன்? எனவரும். அடியென்றது அச்சீர் இரண்டும்பலவுந் தொடர்ந்ததோ ருறுப்பை. யாப்பென்றது அவ்வடிதொறும் பொருளேற்றுநிற்பச் செய்வதோர் செய்கையை. மரபென்றது காலந்தொறும் இடந்தொறும் வழக்குத் திரிந்தவாற்றுக்குக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமையை. துரக்கென்றது பாக்களைத் துணித்து நிறுத்தலை, தொடைவகையென்றது எழுத்துச்சொற் பொருள் களை எதிரெதிர்நிறீஇத் தொடுக்கின்ற தொடைப்பகுதிகளை. நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களை யுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தலை. நோக்குதல் - பயன் கோடல். பாவென்றது இவ்வுறுப்புக்களையுடைத்தாய்ச் சேட் புலத்திருந்து சொல்லும் பொருளுந் தெரியாமல் ஒருவன்கூறிய வழியும், இஃது என்னசெய்யுளென்றறிவதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதோரோசையை. அளவியல் என்றது அடி வரையறையை, திணையென்றது அகத்திணையும் புறத்திணையும் 1, தலைச்சூத்திரம் முதற்குத்திரம். 2. மேலைச்சூத்திரம் - இதனை அடுத்து வரும் இரண்டாஞ் சூத்திாம். 3. தேமா' என்றது, தனித்தனியே பொருள்தரும் அசையால் இயன்ற சீருக்கு உதாரணம். 'சாத்தன்' என்றது, அசை தனித்தனியே பொருள் தராது சீராயவழிப் பொருள் பெற்று வந்ததற்கு உதாரணம்.