பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

胺_份T@_ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உ-ம் அணிமுக மதியேய்ப்ப வம்மதியை நனியேய்க்கு மணிதிகழ் மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண்' எனவருவனவும் பிறவுமாம். (குறிஞ்சிக்கலி-உஅ) ஆய்வுரை : (இ.ஸ்) வெண்பாவுரிச்சீர் நிற்ப நிரைமுதல் வெண்சீர் வந்து (நேர்முன்) நிரையாய்த் தளைத்தல் கலியடிக்கு விலக்கத்தக்கதன்றாம். எ - மு. தட்டல் - தளைத்தல். அவ்வடி என்றது, மேற்குத்திரத்திற் கூறப்பட்ட கலியடியினை. "நிரைமுதல் வெண்சீர் வந்து' என வருஞ்சீரினை இன்னசீர் என வெளிப்பட எடுத்துரைத்தலால் அதற்குமுன் நின்று அதனொடு தளைக்குஞ்சீர் நிரையீற்றியற்சீராகவோ அன்றி ஆசிரியவுரிச்சீராகவோ நின்று நிரைமுதல்வெண்சீரோடு நிரையாய் ஒன்றுதலும் கலித்தளை விகற்பமாம் என்பர் பேராசிரியர். ருஅ. விராஅய தளையு மொருஉநிலை பிலவே. இளம்பூரணம் : என்-எனின். இதுவுங் கலியடிக் குரியதோர் தளை உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) பிறவாகி விரவிய தளையும் நீக்குதலில்லை என்றவாது. அஃதாவது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவுதல்.? 'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந் துயர்மலை இருந்தனன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான்.” (கலித், ங் அ) இதன்கண் முந்துற்ற இரண்டு சீரும் வெண்சீர் வெண்டளை." இரண்டாஞ்சீரோடு மூன்றாஞ்சீர் இயற்சீர் வெண்டளை. 1. ஒரூஉ நிலையின்றே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. தளைவிராவுதலாவது, பிறபாக்களுக்குரியவாகிய பலதளைகளும் ஒருபாவின் அடிக்கண்வந்து கலத்தல், கலியடியிற் கலத்தற்குரியன வெண்டளையும் ஆசிரியத்தளையுமே. 3. இவ்வுரைத்தொடர் பிழையாகவுள்ளது.