பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங் கூம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நரந்த நாறுந் தன்கையாற் புலவுநாறு மென்றலை தைவரு மன்னே யருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ யிரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர வஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்று வீழ்ந் தன்றவ னருநிறத் தியங்கிய வேலே யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வினிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் lகுநரு மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் lயாது வீயு முயிர்தவப் பலவே' (புறம் - உங்ரு) இதனுள் நரந்த நாறுந் தன்கையால் எனவும், அருநிறத்தியங்கியவேலே’ எனவும் தனித்து வந்தன. பெரியகட் பெறினே' என்பது சொற்சீரடி இதனைக் குறளடியாக்கிக் குறளடியும் வருமென்பர் பின்பு நூல் செய்தவாசிரியர்.1 'உப்பிலாஅ வவிப்புழுக்கல்’ (புறம் - ங் கண்க.) முதலிய வஞ்சியடி. ஆய்வுரை : இஃது ஆசிரியப்பாவிற்கு அடிவகையான் வருவதோர் வேறு. பாடு கூறுகின்றது. (இ-ள்) ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரடியாகத் தோன்றுதலுண்டு என்பர் ஆசிரியர் எ-று. 1, இணைக்குறளிடை பல இணைந்திறினியல்பே என்ற சூத்திரவுரையில், 'சிறியகட்பெறினே' என்னும் இப்புறநானூற்றுப் பாடலை யெடுத்துக் காட்டி இஃது இருசீரடியும் முச்சீரடியும் இடையிடைவந்த இணைக் குறளாசிரியப்பா. பிறவும் அன்ன. என்னை? அளவடி யந்தமும் ஆதியு மாகிக் குறளடி சிந்தடி யென்றா யிரண்டும் இடைவர நிற்ப திணைக்குற ளாகும்’ என்றார் காக்கைபாடினியார்' என யாப்பருங்கலவுரையாசிரியர் தரும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். இடையே குறளடியும் சிந்தடியும் வந்து ஈற்றயலடி முச்சீர்த்தாகி வந்த சிலப்பதிகாரப் பதிகப்பாட்டினைக் குட்டச் செந்தூக்கு என்பர் அடியார்க்குநல்லார்.