பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுன 帮、 ஈற்றயலடி முச்சீராம் எனவே ஏனையவடிகள் நாற்சீராதல் பெறப்படும். இவ்வாறு ஈற்றயலடியொன்றும் முச்சீர்த்தாய் ஏனைய நாற்சீரடிகளாய் வரும் ஆசிரியத்தைப் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர் நேரிசையாசிரியப்பா எனப் பெயரிட்டு வழங்குவர். இதுவும் அது. (இ-ள்) மேற்கூறப்பட்ட முச்சீரடி ஈற்றயலிலன்றி இடையில் வருதலையும் விலக்கார் தொடைவகையுணர்ந்த புலவர் எ-று. மோனை, எதுகை முதலிய தொடைகளின் அமைப்பினை யுணர்ந்தோர் என்பார் தொடையுணர்வோர்’ என்றார். எனவே ஆசிரியப்பாவின் இடையிடையே முச்சீரடி வருதல் தொடை வகைக்குச் சிறப்பளிக்கும் என்றாராயிற்று ఆr6 முச்சீர் முதற்கையுள் நிறையவும் நிற்கும். இளம்பூரணம் : என்- எனின். கலிப்பாவிற்கு ஈற்று வேறுபாடு உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) ஈற்றயலடி முச்சீரென வோதப்பட்டது கலிப்பா விண்கண் நாற்சீர் ஆகியும் வரும் என்றவாறு 1 இச்சூத்திரம் எதிரது நோக்கிக் கூறப்பட்டது; எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே (செய்யுளியல் எஉ) என ஒதுகின்றாராதலின். 1 முரற்கை என்பது கலிப்பாவிற்கு வழங்கும்பெயர். வண்டுமுரலுதல்போலும் இன்னோசை துள்ளலோசையுடைய கலிப்பாவுக்கு அமைந்தமைபற்றி அது முரற்கை என்னும் பெயர்த்தாயிற்று எனக்கருதுதல் பொருந்தும். 'நிறையவும் நிற்கும்’ என்பது முச்சீர் நாற்சீராகி நிறைந்து நிற்கவும் பெறும் என்பதாம். இவ்வியலில், எழுசீரிறுதி ஆசிரியங் கலியே (சூத். எ.உ) எனப் பின்வருஞ்சூத்திரத்துள் ஈற்றயலடி முச்சீர்த்தாய் வந்த ஆசிரியத்தால் கலிப்பா முடியுமெனக் கூறுதலின் அங்ங்னம் முடியும் ஆசிரியப்பாவின் ஈற்றயலடியின் முச்சீர் முளைநிரை முறுவ லாயத் தெடுத்த, இளமையுந் தருவதோ விறந்தபின்னே என்றாங்கு நாற்சீராய் நிறைந்து நிற்றலும் உண்டு என இச்சூத்திரத்தால் எதிரது நோக்கிக் கூறப்பட்டது என்பது இளம்பூரணர் கருத்தாகும். நிறையவும் நிற்கும் என்பதற்கு முச்சீரடி கலிப்பாவினுள் பலவாக திசம்பவும் நிற்கும் எனக் கொண்டார் பேராசிரியர்,