பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுக ங், ; ; “உலகு பசிப்பப் பசிக்கு முலகு துயர்திரத் தீரு நிலவு நிறுத்திவாழ் வஞ்சி யுடையாழ்வி யென்னு மொருத்தியா லுண்டிவ் வுலகு” அங்ங்னம் செய்யுள்செய்த முன்னோரைக்கண்டு பின். னுள்ளோர். இதனைச் செய்யுளாகச் செய்தலின் இவற்றை ஆரிடமென்பார் இவ்விதி யறியாதார்.: அசைச்சீர்த் தாகும் அவ்வயி னான. 1. இங்கெடுத்துக்காட்டிய செய்யுட்கள் யாவும் முன்னோர் பாடிய செய்யுட்களை படியொற்றிப் பின்வந்தோர் பாடிய பாடல்கள் ஆதலின் இவை நல்லிசைப் புலவர் பாடிய உலகியல் விதிமுறைச் செய்யுட்களெனவே கொள்ளத்தக்கன, இவற்றை உலகியற் செய்யுள்கட்கெய்திய உறுப்புக்களின் மிக்குங் குறைந்தும் வந்த ஆசிடச் செய்யுட்களுக்கு மேற்கோளாகக் காட்டுவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர். அவர் கூற்றை மறுக்கும் நிலையில் அமைந்தது நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரைத் தொடராகும். ஆரிடமென்பது உலகியற் செய்யுள்கட் கெய்திய உறுப்புக்களின் மிக்குங் குறைந்துங் கிடப்பன. ... ... அவ்வாரிடச் செய்யுள் பாடுதற்குரியார் ஆக்குதற்குங் கெடுத்தற்கும் ஆற்றலுடையோராயினார். அவர் இம்மை மதுமை முக்காலமு முணர்ந்த இருடிகளெனக் கொள்க: என்னை? உலகியற் செய்யுட் கோதிய வகையிற் துறையவும் விதப்பவுங் குறையா வாற்றல் இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப" எனவும், 'ஆரிடச் செய்யுள் பாடுதற் துரியோர் கற்றோ ரறியா வறிவுமிக் குடையோர் மூவகைக் காலம் பண்புமுறை யுணரும் ஆற்றல் சான்ற அருந்தவத் தோரே' எனவும் சொன்னார் பாட்டியன் மரபுடையார்' என ஆரிடச் செய்யுளாவன இவையென விளக்குவர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். கற்றோரறியா அறிவு. மிக்குடைய இருடிகள் உலகியல் மொழிநடை விதிகளைக் கடந்து பாடிய செய்யுட்களே வடமொழியில் ஆரிடம் என வழங்கப்பெறுகின்றன. யாப்பருங்கல விருத்தியில் பொய்கையார், குடமுக்கிற்பகவர், ஒளவையார் முதலிய புலவர் பெருமக்கள் பாடியனவாக எடுத்துக்காட்டப்பெற்றுள்ள பாடல்கள் நல்லிசைப் புலவர்களாகிய முன்னைப் புலவர் பெருமக்கள் பாடியுள்ள யாப்பியல் விதிகளை அடியொற்றிப் பாடப் பெற்றனவாகக் காணப்படுதலால் இவற்றை ஆரிடமென்பார் விதியறியாதார் என்றார் நச்சினார்க்கினியர்,