பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னகர க. கரு வென்பதேகொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப் படா. அவை ஆசிரியர் நூல்செய்த காலத்துள்வாயினுங் கடைச்சங்கத்தகக் காலத்து வீழ்ந்தமையிற் :ாட்டிலுந்தேதிகை யினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர்; அவற். றுக்கு இது மரபிலக்கணமாகலினென்பது. இனிப், பாட்டினுந் தொகையிலும் உள்ள சொல்லே மீட் டொருகாலத்துக்கு உரித்தன்றிப்போயினவும் உள; அவை முற். காலத்துளவென்பதேகொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுன் செய்யப்பெறா என்பது -్క இனிப் பொருளும் இவ்வாறே காலத்தாலும் இடத்தானும் வேறுபடுதலுடைய ஒருகாலத்து அணியுங் கோலமும் ஒரு காலத்து வழங்காதனவுன. ஓரிடத்து நிகழும் பொருண் மற்றோ ரிடத்து நிகழாதனவுமூன. அவ்வக்காலமும் இடனும்பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்யவேண்டுமென்டது. ஒருகாலத் துக் குழை பெய்தாரென்றும், ஒருகாலத்துக் குழல். முடித்தா ரென்றும், ஆண்மக்களை ஒழித்தகாலத்தும் அது கூறார். பதி னெண்பாடைத் தேசிகமாக்கள் அணியினையுங் கோலத்தினையும் விரவிக்கூறாது அவ்வந்தாட்டாரே பூணு மாற்றாலும் புனையுமாற்றானும் ஏற்பச்சொல்லுதல் மரபு. இனி, நான்கு நிலத்தினும் ஒரிடத்துப் பொருளை ஒரிடத்த வாகச் சொல்லுதலும் உலகொடு மலைதலுஞ் சமயங்களொடு 1. தொல்காப்பியனார் காலத்து வழக்கிலிருந்த அதோளி, இதோளி, உதோளி என்னும் இகரவீந்து உயர்தினைக் கட்டுப்பெயர்களும் மேகத்தைக் குறிக்கும் 'குயின்' என்னும் னகர வீத்து அஃறிணைப்பெயரும் கடைச்சங்கத்தார் காலத்து வழக்கு வீழ்ந்தன. வழக்கு வீழ்ந்த அச்சொற்களைக் கடைச்சங்கத்தார் தாம் பாடிய பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் மீளவும் தாட்டிக் கொண்டு செய்யுள் செய்யாமைக்கு இச்சூத்திரங் கூதும் மரபிலக்கணத்தினை அவர்கள் பின்பற்றினமையே காரணமாகும். டாட்டு-பத்துப்பாட்டு. தொகை. எட்டுத்தொகை, 2. தமிழகத்தில் வாழ்ந்த ஆடவர்கள் முன்னொரு காலத்தில் வடிகாதித் பெய்தற்குரிய குழை என்னும் காதணியினை அணிந்திருந்தார் என வும், தலை மயிரைக் குழல் பட முடித்துக்கொண்டிருத்தார் எனவும் சங்க இலக்கியம் கூறு:கின்றது. அக்காலத்து ஆண்மக்கள் கொண்டகோலம் பிற்காலத்து மாறிவிட்டது. அவ்வாறு மாறிய பிற்காலத்திலும் குழைபெய்தார் என்றும் குழல்பட முடித்தார் என்றும் ஆண்மக்களைக் குறித்துச் செய்யுள் செய்தல் மரபு நிலைக்கு மாறுபட்ட தாகும்.