பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

聳。萼g தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி (தொல்-செ. 3) என்பதனான், ஒற்றும் அசைக்குறுப்பாகாவோவெனின், அச் சூத்திரத்தானன்றே அவை குறிலும் நெடிலும் அடுத்துவத்தும் வேறுபடாது நேர்நிரையாதலெய்தியது நோக்கி அவை அசைக் குறுப்பாகா வென்றதென்க. மற்று இடைநின்று நிரையாதலை விலக்காவோவெனின், அன்னதொரு விதியுண்டாயினன்றே இவை இடைபுகுந்து விலக்கவேண்டுவதென மறுக்க, நெடிலும் அளபெடையிரண்டும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல் லினமும் இடையினமும் ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமு. மெனப் பத்துந் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அணி பெடையிரண்டும் இனம் மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ங்னமே வேறுபடவந்த பயனோக்கி எழுத்தினை இயற்றிக்கோடலின் எழுத்தியல்வகை யென்றானென்பது. அஃதேல் ஒற்றுங் குற்றிகரமும் ஈண்டோதியதென்னை யெனின், ஒற்றள பெடையான் அசைநிலையுஞ் சீர்நிலையுங் கோடலின் ஈண்டு ஒற்றுக் கூறினான். குற்றிகரமும் உயிராயினும் ஒற்றுப்போல எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் எண்ணப்படாதென்றற்குக் கூறினானென்பது.? அஃதேல், 'ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்' (320) என்பவாகலின், அதை ஈண்டுத் தழாஅற்கவெனின், அக்கருத் தினால் அவ்வாறும் அமையுமென்பது; அற்றன்று, இதனை மேற் புள்ளிபெறு மென்றிலனாதலான் புள்ளிபெறு மென்றற்கும் 'ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்' (320) என்றானென்பது.? 1. குறிலும் நெடிலும் ஒற்றொடு வந்தாலும் ஒற்றின்றித் தனித்து வந்தாலும் நேரசையாம் எனவே அசைகொள்வதில் ஒற்றெழுத்துக்கெனத் தனிமதிப் பில்லை யென்பது பெறப்படுதலால் ஒற்றுக்கள் அசைக்கு உறுப்பாகா என்றதாயிற்று. r 2. ஒற்றளபெடையால் அசைநிலையுஞ் சீர்நிலையுங் கொள்ளுதலானும், குற்றிகரமும் உயிராயினும் எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் ஒற்றுப்போல எண்ணப்படா தென்றற்கும் ஒற்றும் குற்றிகரமும் ஈண்டுச் செய்யுட்குறுப்பாக வோதப்பட்டன. 3. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (செய்யுளியல்-8) என்பது ஒற்றுப் போல எழுத்தெண்ணப்படாதென்பதனை மட்டும் குறிப்பதன்று எழுத்ததிகாரத்தில் குற்றியலிகரம் ஒற்றெழுத்துப்போன்று புள்ளிபெறும் எனக்கூறப்படாத நிலையில் குற்றியலிகரம் ஒற்றுப்போன்று புள்ளிபெறும் என்பதனையும் குறிப்பதாகும்.