பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f. இட தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "உள்ளார் தோழி' என நேரசை நான்கும் வந்தன. "வரி வரால் கலா வலின்” என நிரையசை நான்கும் வந்தன நச்சினார்த் திரிையம் : இது நிறுத்த முறையானே அசை கூறுகின்றது. (இ-ள்) குறிலும் நெடிலும் தனித்து வந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும், குறிற்பின்னர் நெடிலிணைந்து வந்தும், பின்னர் இந்நான்கும் ஒற்றொடு வருதலோடே பொருள்பெற ஆராய்ந்து நிரனிறை வகையான் நேரசையும் நிரையசையும் என்று பெயர் கூறினார் ஆசிரியர். (எ-று). குறிலும் நெடிலும் தம்முள் மாத்திரையொவ்வாவேனும் அவற்றின் மாத்திரையை நோக்காது எழுத்தாந்தன்மை நோக்கி இரண்டற்கும் ஒரோ வோரலகு பெறுமென்றார்.1 இது குறிலிணைக்குங் குறினெடிற்கும் ஒக்கும். நேரசை நிரையசை என்ற பெயர், ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர். இரண்டெழுத்தா னாகாது ஒரெழுத்தானாதலின் நேரியதன்றே: அதனான் நேரிய,அசை நேரசை என்றாயிற்று. 'உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ” (தொல். செய். 44) என்றலின் எண்ணப்படாத ஒற்றுக்கள் பயன்படாது அசைந்து நிற்றலின் அசையென்னும் பெயரும் எய்திற்று. இரண்டெழுத்து நிரைதலின் இணையசையென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று. உதாரணம் : அ, ஆ, அல், ஆல் எனவும், பல, பலா, புகர், புகார் எனவும் வரும். ஒற்றுக்கள் எழுத்தாய் நின்று அலகு பெறுதற் குரியவல்லவென்பது மொழி மரபின் கண்ணே 1. மாத்திரை நோக்காது ஒர் எழுத்தாந்தன்மை நோக்கிக் குறில், நெடில் இரண்டிற்கும் ஒவ்வோர் அலகு (எண்ணிக்கை) கொண்டார். 2 எண்ணுப்படாத . . . வே. 3. நேர் நிரை என்னும் இருநிலைமைக்கண்ணும் ஒற்றுக்கள் அலகு பெறாது அசைந்து நிற்றலின் அசையென்னும் பெயரும் வழங்குவ தாயிற்று.