பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருளச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நாலெழுத்து முதல் இருபதெழுத்து முடியவுள்ள ஆசிரிய நிலம் 17 பதின்மூன்றெழுத்து முதல் இருபதெழுத்து முடியவுள்ள நாலெழுத்து முதல் பதினேழெழுத்து முடிய வஞ்சி நிலம் 10 அளவடியல்லாதனவாகிய இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறுசீரடி, எழுசீரடி, எண்சீரடி ஆகிய சீர்வகையடி நிலங்கள் 6 (turr. Gö. L. 177). ஆக 51 ஆசிரிய அடி 261 வெண்பாவடி 234, கலியடி 131, ஆக 625 அடியாகும் (யா. வி. ப. 175). “அடியிரண்டு இயைந்தவழித் தொடையாம்' என்பவாகலின் (அவ்வாறு இரண்டாகத் தொடுக்கப்பெறாது ஒரடியாகவுள்ள) ஐம்பத்தொரு நிலம் களையப்பட்டன (யா, வி. ப. 175). இனி, இச்சூத்திரத்திற்குத் தொண்டு தலையிட்ட பத்துக் குறை யெழுநூற்றொன்பஃது’ எனப் பாடங்கொண்டு பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வேறு வேறு பொருளுரைத்தனர். தொண்டு தலையிட்ட - ஒன்பதுடன் கூடிய பத்துக்குறை எழுநூற்றொன்பது - அறுநூற்றுத் தொண்ணுாற்றொன்பது. ஒன்பதுடன் கூடிய அறுநூற்றுத் தொண்ணுாற்றொன்பது எனவே எழுநூற்றெட்டு என்பது பொருள் இத்தொகையினை ஐயீராயிரத்து ஆறைஞ்ஞாறாகிய பதின் மூவாயிரத்துடன் கூட்டிப் பதின்மூவாயிரத்தெழுநூற்றெட்டு எனக் கொண்டார் பேராசிரியர், இனி, தொண்டு தலையிட்ட என்ற தொடர் ஒன்பதாலே பெருக்கின எனப் பொருள்படும் எனவும், பத்துக்குறை யெழுநூற்றொன்பது (அறுநூற்றுத் தொண்ணுாற்றொன்பது) என்ற தொகையை ஒன்பதாலே பெருக்கினால் ஆறாயிரத்து இருநூற்றுத் தொண்ணுற்றொன்றாம் எனவும், அத்தொகையை முற்கூறிய பதின்மூவாயிரத்துடன் கூட்டத் தொடைவகை பத்தொன்பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணுாற்றொன்றாம் எனவும் கொண்டார் நச்சினார்க்கினியர்,