பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக ருகங் (இ - ள்) தொடையது பகுதி வழக்கே அவ்விரண்டு மென்ப ! (எ மு). எனவே, அப்பகுதியுளொன்று தெரித்திலமென்பது இதன் கருத்து. ஆங்கென்றதனான் மேற்பகுத்த இரண்டிடமுங் கொள்க.2 நச்சினார்க் திரிையம் : இது ஐயமறுக்கின்றது.3 (இ-ள்). சீர்வகையடியின் றொடைப்பகுதி வரையறைப்படாவேனும் அவை செய்யுட்க விைற்கும் நிலைமைக் முற்கூறிய கட்டளையோனின்று தொடை கொள்ளப் பெறுமென்று கூறுவர் புலவர் ; எ. து. என்றது, வரையறை யின்றேனுந் தொடைச்சுவடுபடு மென்றவாறு.5 ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) தொடை நிலை வகை மேற்கூறப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவன என்று கூறுவர் ஆசிரியர் எ-று. 1. அவ்விரண்டும் என்றது, வரையறையுடையனவும் வரையறையில்லனவும் ஆகிய இருவகைத் தொடைப்பகுதிகளையும் கட்டியது. 2. வரையறையுடையன, வரையறையில்லன எனப்பகுத்த இரண்டிடம். 3. கட்டளையடிகளை நிலைக்களமாகக் கொண்டு தொடைப் பகுதிகளை வரையறுத்தல் போன்று சீர்வகையடிகளை நிலைக்களமாகக் கொண்டு தொடைப் பகுதிகளை வரையறுத்தல் கூடாதோ என ஐயுறுவார்க்கு, சீர்வகையடிகளும் முற்கூறிய கட்டளையடிகள் போன்று தொடை கொள்ளப்படும் என இச்சூத்திரத்தால் ஐயமகற்றுதலின் "இஃது ஐயம் அறுக்கின்றது” எனக் கருத்துரை வரையப்பட்டது. 4. தொடைவகைநிலை' என்றது, சீர்வகையின் தொடைப் பகுதியினை. "ஆங்கு என்றது முற்கூறிய கட்டளையடியினை. ஆங்கெனவே அக்கட்டளையடிபோல் (நின்று தொடை கொள்ளப் பெறும்) என்பதாம். 5. தொடைச்சுவடுபடுதலாவது, செய்யுளிடத்தே இஃது இன்ன தொடை என்பது புலப்படப் பதிந்து தோன்றுதல். சீர்வகையடியின் தொடைப் பகுதி இத்துணைய என வரையறைப்படுத்தற்கு அடங்காவாயினும் கட்டளையடியிற் கொள்ளப்படும் தொடையமைப்பினையே அவை அடியொற்றியமைவன என்பதாம்.