பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மேல் அடியெனச் சிறப்பித்துரைக்கப்பட்ட நாற்சீரடிக்கண் பெருக்கிப் பெற்ற தொடை பதின் மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணுற்றொன்பது எனப்பட்டன. இவ்வாறே நாற்சீரடியொழிந்த இருசீரடி முதலாக எண்சீரடி யீறாகக் கிடந்த ஏனை அடி வேறுபாட்டின் கனெல்லாம் இத்தொடைகளைக் கூட்ட வரும் தொடைப்பகுதி வரையறையின்றி வரம்பிலவாய்ப் பலவாகும் என்பதும், இங்ஙனம் எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் பலவேறு வகைப்பட விரித்துணர்த்தப்படும் தொடைவிகற்பங்கள் யாவும் மேற்சொல்லப்பட்ட டாகுபாட்டின் கண் அடங்குவன என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார். கருத்தாகும். இனி, மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்பனவற்றின்கண், இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய். கடை, கடையிணை, பின். கடைக்கூழை, இடைப் புணர் என வேறுபடுத்து உறழ்ந்து, எழுத்தந்தாதி அசையந்தாதி, சீரந்தாதி எனவும், உயிர்மோனை, உயிர் எதுகை, நெடில் மோனை, நெடிலெதுகை, வருக்கமோனை. வருக்க வெதுகை, இனமோனை, இனவெதுகை எனவும், மூன்றாமெழுத்தொன் றெதுகை, இடையிட்டெதுகை. ஆசெதுகை எனவும் இவ்வாறுவருவனவற்றை மேற்கூறிய வகையினான் எழுத்து வேறுபாட்டினான் உறழவும், நிரல்நிறையாகிய பொருள் கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலிய சித்திரப் பாக்களானும் உறழவும் வரம்பிலவாய் விரியும்” என்றார் இளம்பூரணர். ఫణి மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே. இனம் ஆரணம் : என்- எனின். இது நோக்கென்னும் உறுப்பு உணர்த்துதல் துதலிற்று, (இ.ள்) மாத்திரை முதலாக அடிநிலையளவும் நோக்குத லாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் என்றவாறு. 1. அடிநிறைகாறும் என்பது பேராசியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட i-fir L-th.