பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்- நூற்பா ன் ருகரு காரணமெனினுங் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற் காரணமென்பதனை உண்டற்றொழில் என்றாற்போலக் கொள்க.. அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கு நிலை 2 அடிநிலை காறும் என்றதனால் ஒரடிக்கண்ணும் பல்வடிக்கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒரு நோக்காக ஒடுதலும் பல நோக்காக ஒடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூன்றுவஐகப்படும்: "அறுசுவை உண்டி அமர்த்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும்-வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று' (நாலடி க.) இஃது ஒரு நோக்காக ஒடிற்று. "அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதியார் கேண்மைஎஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். (நாலடிகள் . இது பல நோக்காகி வந்தது. 'உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாட் 1. உண்டற்றொழில் என்பதனை உண்ணுதலாகிய தொழில் என விரித்தாற் போன்று நோக்குதற்காரணம் என்பதனை நோக்குதலாகிய காரணம எனவிரிக்க என்பதாம். காரணம்-கருவி, 2 அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை-அத்தொடரையேtண்டும் முறித்து நோக்கி நிற்கும் நிலை. 3, ஒருநோக்காக ஓடுதலாவது முதலிலிருந்து முடியும் வரை தொடர்ப்பொருளை இடையறவின்றி நோக்கியுணரும்படி ஒரே தொடராகச் செல்லுதல், பலநோக்காக ஓடுதலாவது, கருதிய பலபொருள்களையும் நோக்கி யுணரும் படி ஒருசெய்யுள் தனித்தனியே பலதொடர்களையுடையதாய் அமைதல். இடையிட்டு நோக்குதலாவது, ஒருதொடர், அதன் அயலிற்கிடந்ததனை நோக்காது அடுத்துப் பின்வருந் தொடர்ை நோக்கிநிற்றல்.