பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள ருகன் மலர்ந்த ஞாலம் புலம்புபுறங் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின் பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துனையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னு:றந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அல்ரின் நாறும் ஆய்தொடி அரிவைதின் மாணலம் படர்ந்தே' (அகம் 4) என வரும். இப்பாட்டின் ஒசை முதலியனவெல்லாங் கேட் டோரை மீட்டுந் தன்னை நோக்கி நோக்கப் பயன்கொள நிற்கும் நிலைமை தெரிந்துகொள்க. இனி, அடி நிறைகாறும் என்றதனாற் செய்யுண் முழுவதும் எவ்வகையுறுப்புங் கூட்டிநோக்கி யுணருமாறுங் கூறுதும் :முல்லை யென்பது முதலாகக் காணம் என்பதீறாக நாற்சொல்லி யலான் யாப்பு வழிப்பட்டதாயினும் பருவங்காட்டி வற்புறுக்குந் தோழி பருவந் தொடங்கிய துணையேகாணென்று வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணரவைத்தானென்பது. உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்” என்னுந்துணையும் தலை மகனது காதன் மிகுதி கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணரவைத்தான். ஒழிந்த அடிநிறைகாறும் பிரிந்த காலம்அணித்தெனக் கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணரவைத்தானெனப்படும்; என்னை? முல்லையென்னாது வைந்துணை யென்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்துனையாகாது மெல்லெனுமாகலின், இல்லமுங்கொன்றையும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றாள். - கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லையரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை இரும்பு திரித்தன்ன மருப்பு, என்றது உம் நீர்தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந் தணிந்தில இரும்பு முறுக்கிவிட்டவழியும்