பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச 'குறிவினை யுகர மல்வழி யான” (தொல்-செய்.5) என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்குமாயின. உ - ம் வண்டு, நாகு, காம்பு எனவும்: வரகு, குரங்கு; மலாடு, மலாட்டு எனவும், இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் திரைபும் வந்தவாறு, இனி, முற்றுகரம் இரண்டசைப்பின்னும் வருங்காற் குறி லொற்றின் பின்னும் நெடிற் பின்னுமென நேரசைக்கு இரண் டல்லதாகாது. நிரையசைக்கண்ணுங் குறிலிணைப் பின்னுங் குறினெடிற் பின்னுமல்ல தாகாது.1 உ-ம் : மின்னு நாணு எனவும், உருமு குலாவு எனவும் வரும். வாழ்வு, தாழ்வு என நெடிலொற்றின் பின்னும் முற்றுகரம் வந்ததாலெனின், அவை ஆகாவென்பது உம் இக்காட்டிய நான் குமே ஆவனவென்பது உம் முன்னர், 'நிற்ற லின்றே யிற்றடி மருங்கினும்’ (தொல். செய், 9) என்புழிச் சொல்லுதும்.2 இனி, ஒருசாரார் நேர்பசை நிரையசை யென்பன வேண்டா வென்ப. என்னை : குற்றுகர முற்றுகரங்களை வேறாக்கி அலகிட அமையாதே ? ஞாயிறு எனக் குற்றுகரங் குறிலினையாய் அலகு பெறுமோவெனக் குற்றங் கூறுப. முற்றுகரமுந் தேமா” வென நேரசையாயிற்று மின்னு’ என்றவழி வேறலகுபெற 1. நேரசை நான்கனுள் குற்றொற்று, நெடில் என்னும் இரண்டின்பின்னரே முற்றுகரம் வந்து நேர்பசையாகும். நிாையசை நான்கனுள்ளும் குறிலினை, குறினெடில் என்னும் இரண்டின் பின்னுமே வந்து நிரைபசையாகும் என்பர் பேராசிரியர். 2. புணர்ச்சிக்கண் நிலைமொழித்தொழிலாகிய ஷகரமும் நிலைமொழியீறு கெட்டுநின்றவுகரமுமே நேர்பசை திரையசைகட்கு உறுப்பாமென்பதனை, முற்றியலுகரமும் மொழிசிதைத்துக்கொளா (செய்-9) எனவருஞ் சூத்திரவுரை விற்பேராசிரியர் குறித்துள்ளார். தாழ்வு’ என நெடிற்பின் வந்த முற்றுகரம் இயல்பாய் நின்றவுகர மாதலின் அவர்கருத்துப்படி நேர்பசையெனக் கொள்ளப் படாதாயிற்று.