பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ينتج ستg} அமையுமென்பது. அற்றன்று, குற்றுகரத்தினைக் குற்றெழுத்தென்ப வேறு குற்றுகரம் வேண்டாதாரும், என்றார்க்கு வேண்டினானையுங் குற்றங் கூறுவரவர் என்னை ? குற்றியலுகரம் அரைமாத்திரைத்தாகலின் ஒற்றுப்போல ஒரசையுள் ஒடுக்கி அலகிடப்படும். அற்றன்றேற் குற்றெழுத்தாக்கி அலகு வைக்கவே அமையுமென்பதாம் அவர் கருத்து. அதற்கு விடை : குற்றுகரம் ஒற்றுப்போன்று ஒடுங்கி நில்லாது; என்னை ? தன் னான் ஊரப்பட்ட ஒற்றுந் தானுமாகி அரைமாத்திரைத்தாகியும் ஒடுங்கி இசையாது அகன்று இசைக்கும்; அதனால் ஒற்றென்றலுமாகாது; பின்னும் ஒரு மாத்திரைத் தாகாமையிற் குற்றெழுத்தெனலுமாகாது; மற்று அதனான் அதனை ஒற்றென. அடக்கார்; குற்றெழுத்தென ஏற்று அலகு கொள்ளார், இனி அதனைச் செயற்பாலதோர் அசையாக்குதலென்பது நோக்கி நேர்பசை நிரைபசையென வேண்டினானென்பது.? அவை வண்டு தொண்டி என ஒசை யொவ்வாமை செவி கருவியாக உணர்ந்துகொள்க. அஃதேல், ஞாயிறு வலியது' என்றவழிக் குறிலிணையுகர மெனக் குற்றெழுத்தாக்குவது எற்றுக்கெனின், அளபெடையை ஒசையிற் சிதையாது "நிலப்படையுள் அலகு சிதைத்தாற் போலக் குற்றுகரத்தைக் குற்றெழுத்துப்போல அலகுபெறு மென்பது இலக்கணமில்லதொரு வழுவமைதி தானாயதனை இலக்கணமாக ஒர்த்துக்கொண்டு இலக்கண வகையாற் குற்றுகர மாதலை விலக்குவாரும் உளரோவென 1. மின்னு' என்புழி முற்றியலுகரம் தேமா என நேரசையாயிற்று. குற்றியஅகரம் அரைமாத்திரையுடையதாதலின் அது மெய்யெழுத்துப்போல ஒரசையுள் அடக்கி அலகிடப்பெறுதல் வேண்டும். அவ்வாறு மெய்யென அடக்கமுடியாவிட்டால் குற்றெழுத்தாகக்கொண்டு அசையமைக்கலாம். இவ்விருவகையுமன்றிக் குற்றியலுகரத்தையுறுப்பாகக் கொண்டு நேர்பசை, நிரைபசையென வேறிருவகை அசை கொள்ளவேண்டிய இன்றியமையாமையில்லையென்பர் ஒருசார் யாப் பிலக்கண ஆசிரியர்கள். 2. குற்றியலுகரம் தன்னால் உணரப்பட்டமெய்யுந் தானுமாகி அரைமாத்திரையினதாய் நின்றநிலையிலும் ஒற்றுப்போல ஒடுங்கிநில்லாது விரிந்தொலித்தலால் அதனை ஒற்றென அடக்குதலும் கூடாது. ஒரு மாத்திரைத்தாகாமையின் அதனைக் குற்றெழுத்தென அலகு கொள்ளுதற்கும் இடமில்லை. இந்நிலையில் அதனையுறுப்பாக்கி வேறொரசைகோடலே செயற்பாலது என வுணர்ந்த தோல்காப்பியனார் அது கொண்டு நேர்பு, திரைபு என்னும் அசைவகையினையமைத்துக் கொண்டார்.