பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச H_ శ్రీ: மறுக்க. அஃதாக, முற்றுகரம் ஒரு மாத்திரையாதலிற் குற்றெழுத்தாக்கி நேரும் நிரையுமாகப் பெறாவோவெனிற் பெறா; என்னை ? வேண்டு வண்டு வண்டு வண்டு' என நின்றவழிப் பிறந்த அகவலோசை, 'மின்னு மின்னு மின்னு மின்னு” என நின்ற வழியும் பெறப்படுமாதலின், அதுவும் அது பட்டதே பட்டு அவ்வசையே பெறுமென்றா னென்பது.2 அல்லது உம் வெண்பாட்டீற்றடி வண்டு எனக் குற்றுகரவீற்றான் இற்றவழிக் கோலு என முற்றுகர வீற்றான் இறுமாயினும் ஒத்தவோசையாம். இனி, உகர வீறல்லாத தேமாவென்பதனான் வெண்பா முடியாவென்பர், அதனாலுங் குற்றுகரத்தின் செய்கை முற்று கரத்திற்கும் வேண்டி நேர்பு நிரைபு கொண்டானென்பது. அற்றன்றியுங் குற்றுகரஞ் சார்ந்து தோன்றுமாறுபோல இம் முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதலொப்புமை நோக்கியும் அதனைக் குற்றுகரம்போல ஒரசைக்கு உறுப்பாம் என்றானென்பது. 'எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப' (தொல், செய். 48) 1. அளபெடையை ஒசையிற் சிதையாது அலகு சிதைத்தாற்போல, ஞாயிறு, வலியது என்புழிக் குற்றியலுகரத்தைக் குற்றெழுத்துப்போல அலகுபெறுமெனக் கொள்ளுதல் இலக்கணமில்லதோர் வழுவமைதியாகும். ஒருசிலவிடங்களில் அருகிவரும் அதனையே யாண்டும் செல்லும் இலக்கணமாகக்கொண்டு குற்றியலுகரம் நேர்பசை நிரைபசைகட்கு உறுப்பாதலை இலக்கணமுனர்ந்தோர் விலக்கமாட்டார்கள் என்பதாம். இவ்வுரைப்பகுதியுள் அளபெடையை ஒசையிற்சிதையாது நிலப்படையுள் அலகு சிதைத்தாற்போல’ எனவரும் தொடரிலுள்ள நிலப் படையுள்' என்பதனை நீக்கிப்படிக்கப்பொருளினிது புலனாதல் காண்க. 2. முற்றுகரம் ஒருமாத்திரைத்தாயினும், வண்டு வண்டு வண்டு வண்டு’ எனக் குற்றியலுகரம் நின்றவழிப்பிறந்த அகவலோசை மின்னு மின்னு மின்னு மின்னு’ என முற்றுகரம் நின்றவழியும் பிறத்தலின் அவ்வழி முற்றுகரமும் குற்றுகரத்தின் இயல்பினதாய் தேர்பு, திரைபு என்னும் அசைக்கு உறுப்பாமெனக் கொண்டார். அன்றியும் குற்றுகரம் மொழியிடைச் சார்ந்து தோன்றுமாறுபோல வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றும் முற்றுகரமே ஈண்டு உரியசைக்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பதாம்.