பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா மிக ருருக ஈற்றின் மண்டிலமோதிய தென்னையெனின், அது சொல் லாக்காற் குட்டமே நேரடிக்கு ஒட்டுவதாவான் செல்லுமாகவி னென்பது. மண்டிலமென்பன. “மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரவா னாவே வேறா மென்றோள் வளைநெகி மும்மே கூறாய் தோழியான் வாழு மாறே” (யா. வி. ப. 369) என்றற் றொடக்கத்தன. ஒத்தாழிசையை முன்வைத்ததென்னை பெனின், மண்டிலம் போல்வனவுங் குட்டம்போல்வனவுங் கலிப்பாவினுட் சிறு பான்மைய என்றற்கென்பது. அவை அளவடிக்குரிமை யாண்டுப் பெறுதுமெனின், அவை தம்மை உறழுங்கால் ஒதிய நில வகையானும், 'இன்சிர் வகையினைந்தடிக்கு முரிய” (தொல்-செய்-54) என்னுஞ் சீர் வகையானும் பெறுது மென்பது. இதனது பயம் குறளடி வஞ்சிப்பாப்போலப் பா வேறுபடாவென்பது. ஒட்டின வென்றதனான் இத்துணை போகாது சிறுவர விற்றாய் வரும் வெண்பாக்கண்ணுமென்பது கொள்க. (ககரு) நச்சினார் க்கினியம் : இதுவும் பாவிலக்கணங் கூறுகின்றது. (இ-ஸ்). ஒத்தாழிசையும் -ஒத்தாழ்ந்த வோசையும். மண்டில யாப்பும் - மண்டலித்துவரும் யாப்பும் குட்டமும் இருசீரும் முச்சீருமாகிக் குறைந்துவருவனவும், நேரடி ... ... ... என்ப. நாற்சீரடிக்குப் பொருந்தின என்று கூறுவராசிரியர். எ-று. என்றதனால், நாற்சீரடி முரற்கைபடத் துள்ளிவருதலே. யன்றித் தாழம் பட வோசைபெற்றும் வருமென்றார். அதுவே ஒத்தாழிசையை ஒத்து மூன்றாய்வருமென்று "ஒத்துமூன் றாகு 1. நாற்சீரடியாகிய மண்டிலயாப்புக் கூறாக்கால் இருசீர் முச்சீரடிகளே நேரடிக்குப் பொருந்துவதாவான் செல்லும். அங்ங்ணம் செல்லாமைப்பொருட்டு அளவடிக்குரிய பாக்களாகிய ஒத்தாழிசையும் மண்டிலயாப்பும் உடன் கூறினார். 2. ஒத்தாழிசைக்கலியினும் மண்டிலயாப்பின்கண்ணும் இருசீரடியும் முச். சீரடியும் வருங்கால் அவை நாற்சீரடிக்குப்போலப் பாவென்னும் உறுப்புக் கொளுத்தப் பெறும் எனக்கூறிய இதனது பயன், குறளடி வஞ்சிப்பாப்போன்று இங்குப்பாவென்லும் உறுப்பு வேறுபடாது என்பது அறிவித்தல்,